You are here

வேலூர் மாவட்டம் மஜக சார்பில் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் ஃபிரிசர் பாக்ஸ் அர்ப்பணிப்பு…

image

image

image

image

வேலூர்.ஏப்.02., இன்று
மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் இந்திரா நர்சிங் ஹோம் இணைந்த நடத்திய மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வேலூர் சைதாப்பேட்டையில் K.M.K திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இம்முகாமினை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com  அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

3-மண்டல செயலாளர் A.முஹம்மத் பாயில் தலைமை தாங்கினார், 30,31,வது கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜாபர்,
மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ஹமித் மற்றும் மண்டல, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவம் அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு மகளிருக்கான பரிசோதனை முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் வரும் அறுவை சிகிச்சைகள்
செய்ய இலவசமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன  500 மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்டைந்தார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக அனைத்து சமுதாய மக்களுக்கான ஃபிரீஸர் பாக்ஸ் (குளிர்சாதன பெட்டி) மாநில பொருளாளர் SS. ஹாரூன் ரசீது அவர்கள் அர்ப்பணித்தார்கள்.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
வேலூர் (கி) மாவட்டம்
02.04.2017

Top