ஏப்.05, மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரத்தின் சார்பாக ₹ ஆயிரம் மதிக்கத்தக்க அத்தியாவசியப் பொருட்கள் முதற்கட்டமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. 144 தடையுத்தரவினால் வாழ்வாதாரங்கள் முடங்கி சிரமத்திற்குள்ளாகிய குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் இல்லத்திற்கே தேடி சென்று இவ்வத்தியாவசிய பொருட்களை மஜக வினர் வழங்கியுள்ளனர். இதில் மஜக மாவட்டத் துணைச் செயலாளர் B. யாசின், பண்ருட்டி நகரச் செயலாளர் ஹாஜாமைதீன், ஒன்றிய துணைச் செயலாளர் இலியாஸ், வர்த்தக அணி செயலாளர் நூர் முகமது உள்ளிட்ட நிர்வாகிகளும் செயல்வீரர்களும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்வடக்குமாவட்டம்.
கொரோனா வைரஸ்
துப்புரவு பணியாளர் மற்றும் ஏழை எளியோர்க்கு உணவளித்த மஜக வினர்
வேலூர்.ஏப்.04., கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏழை, எளியோர், ஆதரவற்றோர்களுக்கு அன்றாடம் உணவு கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதை கருத்தில் கொண்டு அடித்தட்டு ஏழை மக்கள், சாலையோரம் வசிப்போர் உணவின்றி தவிக்கக்கூடாது என்னும் நல்லெண்ணத்தோடு, ஏழைஎளியோர்க்கும், இக்கொடிய நோய் மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்க தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகின்ற தூய்மைப் பணியாளர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாநகரம் சார்பாக இன்று மதிய உணவு வழங்கப்பட்டது. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 04-04-2020
மஜக துறைமுகம் பகுதி சார்பாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்
சென்னை.ஏப்ரல்.04., ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டம், பகுதி, கிளைகள் சார்பாக பல்வேறு கட்டங்களாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி சார்பாக வருமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவும் விதமாக 15 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகித்தனர். அடுத்த கட்டமாக துறைமுகம் பகுதியில் உள்ள ஏழை எளியோருக்கு உதவும் விதமாக இப்பணியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்தியசென்னைமாவட்டம் 04-04-2020
முதல்வருக்கு நன்றி, மஜக பொதுச்செயலாளர் முதமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
கொரணா தொற்று நோயுக்கு எதிராக உலகமே ஒரணியில் நின்று போராடுகிறது. இந்நிலையில் சில தீய சக்திகள் அதை மதத்தோடு தொடர்படுத்தி , சமூகத்தில் பெரும் பீதியை உருவாக்கி விட்டனர். ஒரு சிலரின் தவறுகளையும், கவனக்குறைவு களையும் ஒரு சமூகத்தோடு முடிச்சுப் போட்டு சித்தரிப்பது என்ன நியாயம்? என்ற கேள்விகள் எதிரொலிப்பது ஆறுதல் அளிக்கிறது. இதை கண்டித்து அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கருத்து கூறியுள்ளனர். மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் " கொரணாவை மதத்தோடு தொடர்புபடுத்தக் கூடாது" என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இது போன்ற பதட்டமான பரப்புரைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். சமூக பதற்றத்தை தணிக்கும் வகையில் கருத்துக் கூறியுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மற்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவையும், சமூக இடைவெளியையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இக்காலக்கட்டத்தில் சமூக இணைய தளங்களில் ஆக்கப்பூர்வமாக செயல்பட அனைவரும் முன் வரவேண்டும் என்றும்
மஜக திட்டச்சேரி பேரூர் சார்பில் சுகாதாரப் பணிகள்
ஏப்.04, நாகை மாவட்டம், நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திட்டச்சேரி பேரூராட்சியில் மஜக சார்பில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு மற்றும் நல திட்டங்கள் பேரூர் செயலாளர் இப்ராஹிம் தலைமையிலும், பொருளாளர் சதாம் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரிஜ்வான் ஒருங்கிணைப்பிலும் நடைப்பெற்று வருகிறது. சுமார் இரண்டு நாட்களாக தொடர்ந்து நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க 'கபசுர குடிநீரை வீடுவீடாக சிறுசிறு குழுக்களாக பிரிந்து சென்று வழங்கி வருகின்றனர். இதன் மூலம் தினந்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர். அதை போன்று மக்கள் அத்தியாவசிய தேவைக்காக கூடுமிடங்களிலும், தெருக்களிலும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் 'கிருமி நாசினி' தெளித்து வருகின்றனர். மேலும், மருத்துவம் உள்ளிட்ட அவரசகால வழிகாட்டல்களையும், நோய்களிலிருந்து தற்காத்து கொள்ள வீட்டில் இருக்க வேண்டிய அவசியத்தை குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம்.