வேலூர்.ஏப்.04.,
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏழை, எளியோர், ஆதரவற்றோர்களுக்கு அன்றாடம் உணவு கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதை கருத்தில் கொண்டு அடித்தட்டு ஏழை மக்கள், சாலையோரம் வசிப்போர் உணவின்றி தவிக்கக்கூடாது என்னும் நல்லெண்ணத்தோடு, ஏழைஎளியோர்க்கும், இக்கொடிய நோய் மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்க தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகின்ற தூய்மைப் பணியாளர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாநகரம் சார்பாக இன்று மதிய உணவு வழங்கப்பட்டது.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
04-04-2020