வேலூர்.மே.16., வேலூர் கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈரோட்டை சேர்ந்த #சவ்தான்யா என்கிற 18 மாத குழந்தைக்கு இரத்தப்புற்று நோய் காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மஜக முன்னால் மாவட்ட து.செயலாளர் M.ஜாகீர் உசேன் அவர்களிடம் இரத்தம் அவசர தேவை என தொடர்பு கொண்டனர். உடனடியாக களம் இறங்கிய மஜகவினர் அக்குழந்தைக்கு தேவையான 11 யூனிட் இரத்தம் வழங்கினார்கள். குழந்தை #சவ்தான்யா-விற்கு உடல் நலம் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING வேலூர் கிழக்கு மாவட்டம். 16.05.2017
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மங்கலம்பேட்டை சமூக நீதி மாணவர் இயக்கம் கலைக்கப்பட்டு மஜகவில் இணைந்தனர்!
கடலூர்.மே.15., இன்று தமுமுகவின் மாணவர் அணியான "சமூக நீதி மாணவர்" இயக்கத்தின் கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை கூண்டோடு கலைக்கப்பட்டு 15க்கும் மேற்பட்டோர் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக்கொண்டனர். அனைவருக்கும் மஜகவின் மாவட்டச் செயலாளர் நெய்வேலி இபுறாகிம் அவர்கள் வரவேற்று கட்சியின் அடையாள அட்டைகளை வழங்கினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், இளைஞர் அணி நிர்வாகி மன்சூர், மங்களம்பேட்டை நகர செயலாளர் ஃபைசல் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கடலூர் வடக்கு மாவட்டம் 15-05-2017
நெல்லிக்குப்பத்தில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி…
கடலூர்.மே.13., இன்று கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. மஜக நகர செயலாளர் அப்துல் பாஷித் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இப்ராகிம், மாநில செயற்குழு உறுப்பினர் B.ஷாஜஹான் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர். உடன் நகர பொருளாளர் நிஜாம், மாவட்ட துணை செயலாளர்கள் அஜீஸ் மற்றும் நெல்லிக்கும் யூஸுப் ஆகியோர் இருந்தனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கடலூர் வடக்கு மாவட்டம். 13.05.2017
மஜக சார்பில் திருமருகல் ஒன்றியம் ஆலமரத்தடி கடைத்தெருவில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்..!!
நாகை.மே.13., மனிதநேய ஜனநாயக கட்சி நாகை தெற்கு மாவட்ட திருமருகல் ஒன்றியம் ஆலமரத்தடி கடைத்தெருவில் இன்று காலை 10:30 மணியளவில் ஒன்றிய செயலாளர் எ.முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது. பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசனி விநியோகிக்கப்பட்டது சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் வடகரை எம்.பரக்கத் அலி, மு.மாவட்ட துனை செயலாளர் யூசுப், மு.வர்த்தக அணி செயலாளர் பிஸ்மி யூசுப்தீன் ஆகியோர் வருகைதந்தனர். உடன் ஒன்றிய துணை செயலாளர் சமீம் மற்றும் ஆதலையூர், கரைப்பாக்கம், கேதாரிமங்களம், ஏனங்குடி கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்கள். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING நாகை தெற்கு 13.05.2017
எழுச்சியோடு நடைபெற்ற கோவை MJTS ஆலோசனை கூட்டம்… மஜகவில் இணைந்த புதியவர்கள்…
கோவை.மே.13., கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கத்தின் (MJTS) ஆலோசனை கூட்டம் நேற்று 12.05.2017 வெள்ளிக்கிழமை தெற்கு பகுதி குனியமுத்தூர் அலுவலகத்தில் மாவட்ட தொழிற் சங்க செயலாளர் கு.சுதீர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில செயற்குழு உறுப்பினர் கே.ஷாஜஹான் அவர்கள் கலந்துகொண்டார். மாவட்ட துணை செயலாளர்கள் ABS.அப்பாஸ், அக்கீம், ரியாஸ் மற்றும் பகுதி செயலாளர் காஜா, துணைசெயலாளர் அப்பாஸ் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் தற்போது மமகவில் இருந்து விலகி மஜக வில் இணைந்த M.I ஹக்கிம் அவர்கள் தொழிற் சங்கவளர்ச்சிக்கு மிகச்சிறந்த ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் பல்வேறு சகோதர்கள் மாற்று கட்சியிலிருந்து விலகி மஜகவில் இணைந்தனர்!!! தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 12.05.2017