எழுச்சியோடு நடைபெற்ற கோவை MJTS ஆலோசனை கூட்டம்… மஜகவில் இணைந்த புதியவர்கள்…

image

image

image

image

கோவை.மே.13., கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கத்தின் (MJTS) ஆலோசனை கூட்டம் நேற்று 12.05.2017 வெள்ளிக்கிழமை தெற்கு பகுதி குனியமுத்தூர் அலுவலகத்தில் மாவட்ட தொழிற் சங்க செயலாளர் கு.சுதீர் தலைமையில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில செயற்குழு உறுப்பினர் கே.ஷாஜஹான் அவர்கள் கலந்துகொண்டார். மாவட்ட துணை செயலாளர்கள் ABS.அப்பாஸ், அக்கீம், ரியாஸ் மற்றும் பகுதி செயலாளர் காஜா, துணைசெயலாளர் அப்பாஸ் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதில் தற்போது மமகவில் இருந்து விலகி மஜக வில் இணைந்த M.I ஹக்கிம் அவர்கள் தொழிற் சங்கவளர்ச்சிக்கு மிகச்சிறந்த ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் பல்வேறு சகோதர்கள் மாற்று கட்சியிலிருந்து விலகி மஜகவில் இணைந்தனர்!!!

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்.
12.05.2017