யூஎயி.ஜூன்.12., ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மான் மண்டல மனிதநேய கலாச்சார பேரவையின் செயற்குழு கூட்டம் கடந்த 09/06/2017 வெள்ளிகிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு MKP அமீரக செயலாளர் மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மண்டல செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், பித்ரா மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்டவைகள் விவாதிப்பட்டன. கூட்டத்தில் மண்டல பொருளாளராக சகோதரர் கடியாச்சேரி S.அப்துல் மாலிக் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டார்கள். அஜ்மான் மண்டல பொருப்பாளராக அமீரக தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் Y.M.ஜியாவுல் ஹக் அவர்கள் நியமிக்கப்பட்டார். மண்டல செயலாளர் செல்லப்பா அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. பின்னர் மண்டலத்தின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அமீரக துணை செயலாளர் M.அபுல் ஹசன், மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய கலாச்சார பேரவை. ஐக்கிய அரபு அமீரகம். #MJK_IT_WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை ஆலோசணைக் கூட்டம்.
குவைத்.ஜூன்.12., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை ஆலோசணைக் கூட்டம் கடந்த 09/06/2017 வெள்ளிக்கிழமை இஃப்தாருக்கு பின் சல்வாவில் மண்டல செயலாளர் சகோ.முத்துகாபப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் தலைமமையில் நடைபெற்றது. இதில் இவ்வருட ரமலான் மாதத்தின் அடுத்த கட்ட நிகழ்ச்சி நடத்துவது குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மண்டல, கிளை நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டனர். தகவல்; மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி. குவைத் மண்டலம். #MJK_IT_WING 55278478 - 60338005 - 65510446.
மஜகவின் கடலூர் (தெ) மாவட்ட செயல்வீரர் கூட்டம்…
கடலூர்.ஜூன்.11., கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் தலைமையில் 10-06-2017 நேற்று இரவு நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, மாநில செயலாளர் தைமிய்யா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினர். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கிளை நிர்வாகிகள், செயல்பாட்டாளர்கள் பங்கெடுத்தனர். தகவல் தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் (தெ) மாவட்டம் 10-06-2017
வடகரையில் நாகை MLA மக்கள் சந்திப்பு…
நாகை. ஜூன்.09., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியம் வடகரையில் இன்று பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்மா தொழுகையில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஜமாத்தார்களை சந்தித்துப் பேசினார். பிறகு கடைவீதிக்கு வந்து பொதுமக்களை சந்தித்து குறைகள் மற்றும் விருப்பங்களை கேட்டறிந்தார். மாணவ - மாணவிகளுக்கு கல்லூரி பரிந்துரை கடிதங்கள், விதவை பெண்களுக்கு உதவித்தொகை கிடைக்க பரிந்துரை கடிதங்கள் ஆகியவற்றை வழங்கினார். பிறகு தனது நிதியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டிடத்தையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பாக்கம் - கோட்டூருக்கு பார்வையிட சென்றார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 09.06.2017
கோவையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி..! மஜக நிர்வாகிகள் ஆறுதல்…!!
கோவை.ஜூன்.08., கோவை உக்கடம் மஜீத் காலனியில் வசித்து வரும் சுலைமான் என்பவரின் மகன் சல்மான் (19) மற்றும் மகள் சக்கீலா பானு (16) ஆகியோர் நேற்று மின்சார விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன்) தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர் TMS.அப்பாஸ் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் உடனடியாக அமைச்சர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினர். அதன் விளைவாக சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், DRO, RDO மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வந்தனர். அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். மேலும் அக்குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து முதல்வரின் தனிக்கவனத்திற்கு கொண்டு செல்வதாக மஜக நிர்வாகிகளிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர். தகவல். தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 08-06-2017