நாகை. ஜூன்.09., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியம் வடகரையில் இன்று பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்மா தொழுகையில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஜமாத்தார்களை சந்தித்துப் பேசினார்.
பிறகு கடைவீதிக்கு வந்து பொதுமக்களை சந்தித்து குறைகள் மற்றும் விருப்பங்களை கேட்டறிந்தார். மாணவ – மாணவிகளுக்கு கல்லூரி பரிந்துரை கடிதங்கள், விதவை பெண்களுக்கு உதவித்தொகை கிடைக்க பரிந்துரை கடிதங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
பிறகு தனது நிதியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டிடத்தையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பாக்கம் – கோட்டூருக்கு பார்வையிட சென்றார்.
தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
09.06.2017