திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகி ரபீக் அவர்களின் மகள் ஷாஜிதா, மணமகன் சைபுல்லாஹ், திருமணம் கோல்டன் மஹாலில் நடைபெற்றது. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் அகமது கபீர், மாவட்ட செயலாளர் பேரா. மைதீன், பொருளாளர் அந்தோணி ராஜ், துணை செயலாளர்கள் சையது முஸ்தபா, முஹம்மது பீர்ஷா, அன்வர் பாஷா, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஷேக் இப்ராகிம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது அகமது, மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருச்சி_மாவட்டம் 24.09.2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக புருனை மண்டல நிர்வாகி இல்லத் திருமணம்… தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் மற்றும் மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம்.தாஜுதீன் பங்கேற்று வாழ்த்து!
மஜக புருனை மண்டல நிர்வாகி ஜாகிர் உசேன் அவர்களின் மகள் மணமகள் J.ஆயிஷா நூரத் மணமகன் A. முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் திருமணம் ஆவூர் ஜாமியா மஸ்ஜிதில் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் மற்றும் மாநில செயலாளர் நாச்சிக்குளம்.தாஜூதீன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இந் நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம் 22.09.21
நாச்சிக்குளத்தில் ரயில்வேதுறை சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி! மஜக சார்பில் கையெழுத்து இயக்கம்! மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்பு!
திருவாரூர் மாவட்டம் நாச்சி குளத்தில் ரயில்வே துறை சார்ந்த மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ஜான் முகமது,அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், அவர்கள் பங்கேற்று ரயில் நிலையத்தில் செய்யவேண்டிய அடிப்படை கட்டமைப்பு பணிகள் குறித்து உரையாற்றினார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,தோழமை கட்சி நிர்வாகிகள், உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவாரூர்_மாவட்டம் 21.09.2021
மத உணர்வுகளை கொச்சை படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மஜகவினர் புகார் மனு! புகார் மனுவின் அடிப்படையில் சென்னையில் சிவக்குமார் கைது!
மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் S. பிஜ்ருள் ஹபீஸ், தலைமையில் கட்சி நிர்வாகிகள் கடந்த 18.09.2021 அன்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், இஸ்லாமியர்களின் நம்பிக்கையை கேலி செய்தும், இஸ்லாமிய பெண்களை இழிவுப்படுத்தியும், இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக கருத கூடிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை பற்றி அருவருக்கதக்க வகையில் பேசி வீடியோ வெளியிட்ட கயவன் யோகா குடில் சிவகுமார், மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இச்சந்திப்பின் போது மாவட்ட துணை செயலாளர் முஜீப் ரகுமான், அமீர் கான், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அசரப் அலி, மாநகர பொருளாளர் ஐயப்பன், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநகர செயலாளர் மஹீன் இப்ராஹிம், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அப் புகாரின் அடிப்படையில் தற்போது யோகக்குடில் சிவக்குமார், கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 18.09.2021
அரியலூரில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!
செப்:20., மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூரில் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அக்பர் அலி, திமுக திட்ட பாதுகாப்புக்குழு உறுப்பினர் சுபா சந்திரசேகர், மற்றும் மஜக நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #அரியலூர்_மாவட்டம் 20.09.2021