மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் M. சுல்தான், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக MJTS தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் MH. ஜாபர் அலி, அவர்கள் கலந்து கொண்டு ஜனவரி 8 சிறை முற்றுகை போராட்டம் குறித்து பல்வேறு பணிகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைளை வழங்கினார். மேலும் முற்றுகை போராட்டம் தொடர்பான வாகன ஸ்டிக்கர்கள்,நோட்டீஸ், ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார். கூட்டத்தில் சிறை முற்றுகை போராட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்டம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் A. ஷேக் மைதீன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் காஜா மைதீன், முகமது நிவாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் M. ஆரிஃப் அப்பாஸ், N. மகேந்திரன், NMT. முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாரிஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. #கோவையில்திரள்வோம் #நீதியைவெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_வடக்கு_மாவட்டம் 24.12.2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலைக்கு குழு அமைப்பு… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!
ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலை குறித்து தமிழக அரசு குழு அமைத்திருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது. இக்குழுவில் மனித உரிமை களத்தில் தீவிர முனைப்புடன் இருக்கும் மேலும் சிலரையும் இணைத்து, விரைவில் அதன் பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். ஆயுள் தண்டனை கைதிகளின் முன் விடுதலை என்பது சாதி, மத, வழக்கு பாராபட்சமின்றி அமைய வேண்டும் என்பதே அனைவரின் வேண்டு கோளாகும். எதிர்வரும் ஜனவரி 8 அன்று கோவை மத்திய சிறையை முற்றுகையிடவிருக்கும் எமது கவன ஈர்ப்பு போராட்டத்தில் இக்கோரிக்கையே பிரதானமாக இருப்பதால், இக்குழு தாமதமின்றி தங்களது பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 24.12.2021
NTF தலைமை நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ்..!
சென்னை.ஜன.04., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8 அன்று "சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. அது தொடர்பாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து போராட்டத்திற்கான அழைப்பிதழ்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு நிகழ்வாக இன்று சென்னையில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு - (NTF) மாநில பொருளாளர் ஜாஹிர் ஹூசைன், துணைப் பொதுச்செயலாளர் கமருதீன் ஆகியோரை நேரில் சந்தித்து மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் ஜனவரி 8 மத்திய சிறை முற்றுகைக்கான அழைப்பிதழை வழங்கினார். அவர்களுடன் NTF சென்னை மண்டல செயலாளர் நிசார் அஹமது, சென்னை மண்டல துணைச் செயலாளர் பீர் முஹம்மது ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் நாகை மாவட்டம், நாகூரில் NTF-ன் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அவர்களை மஜக நாகை மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதின் அவர்கள் சந்தித்து போராட்டத்திற்கான அழைப்பிதழை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், தலைமை
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணனிடம் மஜக சார்பில் கோரிக்கை மனு..
திருவாரூர்.ஜன.04., 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8, 2022 அன்று கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. இதனிடையே அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் ஆங்காங்கே மஜகவினர் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேசிட இன்று முதல் மனு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜனவரி 5 அன்று தமிழக சட்டமன்றம் கூடவிருப்பதால், இக்கோரிக்கையை சட்டமன்றத்தில் எழுப்புமாறும், குரலற்ற அம்மக்களுக்கு குரல் கொடுக்க கோரிய கோரிக்கை மனுவை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் K.கலைவாணன் MLA., அவர்களை மஜக திருவாரூர் மாவட்ட பொருளாளர் சேக்அப்துல்லா அவர்கள் சந்தித்து கையளித்தார். #ReleaseLongTermPrisoners #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவாரூர்_மாவட்டம் 04.01.2022
கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் அவர்களிடம் மஜக சார்பில் கோரிக்கை மனு..
கடலூர்.ஜன.04., 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8, 2022 அன்று கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. இதனிடையே அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் ஆங்காங்கே மஜக வினர் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேசிட இன்று முதல் மனு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜனவரி 5 அன்று தமிழக சட்டமன்றம் கூட விருப்பதால், இக்கோரிக்கையை சட்டமன்றத்தில் எழுப்பு மாறும், குரலற்ற அம்மக்களுக்கு குரல் கொடுக்க கோரிய கோரிக்கை மனுவை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஐயப்பன், MLA., அவர்களை மஜக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் மன்சூர், தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து கையளித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் அஜ்மீர் கான், நகர பொருளாளர் ஹாருண்ரஷீத், நகர துணைச் செயலாளர் உமர் பாரூக், ஆகியோர் உடனிருந்தனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கடலூர்_வடக்கு_மாவட்டம் 04.01.2022