ஜனவரி 8 கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம்! மஜக கோவை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் M. சுல்தான், அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக MJTS தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் MH. ஜாபர் அலி, அவர்கள் கலந்து கொண்டு ஜனவரி 8 சிறை முற்றுகை போராட்டம் குறித்து பல்வேறு பணிகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைளை வழங்கினார்.

மேலும் முற்றுகை போராட்டம் தொடர்பான வாகன ஸ்டிக்கர்கள்,நோட்டீஸ், ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.

கூட்டத்தில் சிறை முற்றுகை போராட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்டம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் A. ஷேக் மைதீன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் காஜா மைதீன், முகமது நிவாஸ், மாவட்ட துணை செயலாளர்கள்
M. ஆரிஃப் அப்பாஸ்,
N. மகேந்திரன், NMT. முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாரிஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

#கோவையில்திரள்வோம்
#நீதியைவெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_வடக்கு_மாவட்டம்
24.12.2021