மயிலாடுதுறையில் டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மஜகவினர் போராட்டம்!


டிச.13.,

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதை முன்னிட்டு 12.12.2020 அன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் வானதி ராஜபுரம் பேருந்து நிலையம் அருகே மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையேற்று இப்போராட்டத்தை முன்னெடுத்தது.

போராட்டத்திற்கு வானதி ராஜபுரம் முஸ்லிம் புதுத்தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபை தலைவர் A.நூர் முஹம்மது தலைமை தாங்கினார்.

விவசாய அணி மாவட்ட செயலாளர் Y.H.ஹாஜா சலிம் தொகுப்புரையாற்றினார்.

இதில் விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், மாவட்ட துணை துணை செயலாளர் ஆக்கூர் ஷாஜகான், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக திமுக குத்தாலம் ஒன்றிய செயலாளர் முருகப்பா, வானதி ராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரி தமிழ்அரசன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி சங்கர், கடலங்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜிவானந்தம், காங்கிரஸ் பிரமுகர் நாகராஜ், ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் மாவட்ட துணை செயலாளர் நீடூர் மிஸ்பாஹுதீன், தகவல் தொழில்நுட்ப அணி நகர செயலாளர் குர்சித் கான், வானதி ராஜபுரம் கிளை பொருப்பாளர்கள் சபியுதீன், ஹாஜா மைதீன், ஜியாவுதீன், தமிஜிதீன், முஹம்மது புஹாரி, மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.

நிகழ்வின் இறுதியில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் நீடூர் ஜெப்ருதீன், அவர்கள் நன்றியுரை நிகழ்தினார்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மயிலாடுதுறை_மாவட்டம்
12.12.2020