வாணியம்பாடி மஜக சார்பில் டிசம்பர்-6 இரயில் நிலையம் முற்றுகை போராட்டம்..! பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று கண்டன உரை..!!

image

image

image

image

வேலூர்.டிச.7., பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நியாமான தீர்ப்பை வழங்க வலியுறுத்தி டிசம்பர்-6 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மஜக சார்பில் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்புகள், பிரநிதிகள் கலந்து கொண்டார்கள்.

நேற்று மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மேற்கு மாவட்ட அமைப்பு குழு தலைவர் S.MD.நவாஸ் தலைமையில் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர்கள் A. ஷாஹின்ஷா பாபு, J.M.வசிம் அக்ரம், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரபு , CPI மாவட்ட செயலாளர் சாமிகண்ணு, CPI(M) மாவட்ட செயற்குழு அருள் சீனிவாசன், விசிக மாவட்ட பொருளாளர் நெற்றிக்கண் ஹபீஸ், அன்வர் CPI, தாலுக்கா செயலாளர் இந்துமதி CPI(M), இன்சாப் மாநில துணை செயலாளர் ஆலியார் அத்தாவுல்லா அவர்களும் கண்டன உரையை பதிவு செய்தார்கள்.

இப்போராட்டத்தில் மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள் M.ஜஹீருஸ் ஜமா, S.M.ஷாநவாஸ், P.M.ஷபியுல்லாஹ், சையத்ஜாவித், S.நயீம் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், பேர்ணாம்பேட், நகரத்தின் செயலாளர்கள், பொருளாளர்கள், உறுப்பினர்கள்  என அனைவரும் கலந்துகொண்டனர்.

தடையை மீறிய இந்த இரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மே_மாவட்டம்.
06.12.2017.