முத்தலாக் குறித்து மத்திய அரசின் விரைவு திட்டம்.. மாநில அரசு கருத்து கேட்பு கூட்டம்..!!

image

image

image

image

வேலூர்.டிச.7., ஒரு நிமிடத்திற்குள் தொடர்ச்சியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து நடைபெறுவதாக கூறி அதற்கொரு சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இது குறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்துக் கேட்புகளை நடத்தி வருகிறது. இதுவரை உ.பி.அரசு மட்டுமே இதற்கு ஆதரவளித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் நிலைபாடு எடுப்பதற்கு முன்பு இது குறித்து தமிழக அமைச்சர் மாண்புமிகு நிலோபர் கபில் அவர்கள் ஒரு கருத்து கேட்பை அவரது அலுவலகத்தில் நடத்தினார்.

இதில் தலைமை ஹாஜி.சலாவுதீன், மஜக சார்பில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA, ஜமாத்துல் உலமா செயலாளர் அன்வர்பாஷா,  நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா MP, முன்னால் வக்புவாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், பாத்திமா முஸாப்பர், IKP சார்பில் NA.தைமியா,
SDPI சார்பில் மாநில செயலாளர் அமிர்ஹம்ஸா, ஹஜ் கமிட்டி தலைவர் ஜப்பார், இல்யாஸ் ரியாஜி, கான்பாகவி, தர்வேஸ் ரஷாதி, மன்சூர் காஸிபி, ஷியா ஜமாத் சார்பில் நபிஸா, INTJ சார்பில் முனிர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிறுவன உறுப்பினர் ரகிம், பாப்புலர் ஃபரண்ட் சார்பில் அப்துல் ரசாக், ஜமாத்துல் உலமா சார்பில் முஹம்மது ஷெரிப், ஷபியுல்லாஹ்.

மேலும் இவர்களுடன் மஜக சார்பில் மாநில செயலாளர் A.சாதிக்பாஷா, மாநில துணை செயலாளர்கள் ஷமிம், வசிம் மற்றும் மாநில இளைஞர்அணி துணை செயலாளர் அன்வர்பாஷா ஆகியோருடன் ஏராளமான உலாமாக்களும் சமுக ஆர்வலர்களும் பங்கேற்றனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்
07.12.2017.