You are here

கூடலூரில்… சட்டமன்ற மரபுகளை மீறிய ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜக வினர் பங்கேற்பு!

தமிழக சட்டமன்றத்தில் மரபுகளை மீறி ஆளுநர் செயல்பட்டு பாதிலேயே சட்டமன்றத்திலிருந்து வெளியேறியதற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

அதன் ஒரு நிகழ்வாக நீலகிரி மேற்கு மாவட்டம் கூடலூரில் அனைத்து கட்சிகள் சார்பில் தமிழக ஆளுநர் RN.ரவியை கண்டித்தும், அவரை ஒன்றிய அரசு திரும்ப பெறக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் தமிமுன்அன்சாரி தலைமையில் மாவட்டபொருளாளர் ரபீக், மாவட்ட துணை செயலாளர்கள் ஜோசப், மஜீத், நிசார்பாபு, நகர செயலாளர் இஸ்மாயில், மற்றும் தோழமை கட்சிகள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Top