வீராணம் நிலக்கரி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4500 ரூபாய் வழங்க வேண்டும், நெல் குவிண்டாலுக்கு 3000 வழங்க வேண்டும் உள்ளிட்ட 59 கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உண்ணாவிரதம் நடைப்பெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைப்பெற்ற இந்நிகழ்வுக்கு அதன் தலைவர் PR பாண்டியன் தலைமை வகித்தார்.
இதில் தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குனர் கெளதமன் தீர்மான அறிக்கையை வெளியிட்டார்.
போராட்டதை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு வாழ்த்துரை வழங்கினார்.
இதில் தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் கவர்னரை கண்டித்து தீர்மானம் போடப்பட்டது.
முக்கியமாக தமிழ்நாடு வாழ்க என முழக்கமிடுவோம் என மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஆலோசனை கூற P.R பாண்டியன் அதை ஆமோதித்தார்
உடனே PR பாண்டியன் தமிழ்நாடு என்று முழக்கமிட்டதும், விவசாயிகள் உணர்சசிப் பொங்க வாழ்க என்று மூன்று முறை முழங்கினர்
இது போராட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
அதுபோல் இனி இந்த அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்புக்குழு தமிழ்நாடு என்ற வார்த்தையுடன் மாற்றப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மஜக மாநில செயலாளர் புதுமடம் அனிஸ், மாநில துணை சசெயலாளர் நெய்வேலி இப்ராகிம், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லிவாக்கம் சாகுல் மாவட்ட துணை செயலாளர் பக்கீர் மைதீன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மி, தென்சென்னை மாவட்ட செயலாளர் கையும், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் இஸ்மாயில் மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணை செயலாளர் ஹனீப், இளைஞரணி மாவட்ட செயலாளர் சித்திக் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மஜகவினரும் பங்கேற்றனர்
இதில் வீராணம் பாசன பகுதியை பாதுகாக்க பிப்ரவரி 4 அன்று நெய்வேலி அனல் மின் நிலையம் மஜக சார்பில் முற்றுகையிடப்படும் எனவும் அறிவித்தார்.