பொள்ளாச்சியில்… சட்டமன்ற மரபுகளை மீறிய ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

தமிழக சட்டமன்றத்தில் மரபுகளை மீறி ஆளுநர் செயல்பட்டு பாதிலேயே சட்டமன்றத்திலிருந்து வெளியேறியதற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

அதன் ஒரு நிகழ்வாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விசிக சார்பில் மாவட்ட செயலாளர் பிரபு அவர்கள் தலைமையில் தமிழக ஆளுநர் RN.ரவியை கண்டித்தும், அவரை ஒன்றிய அரசு திரும்ப பெறக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, தலைமையில் நகர பொருளாளர் அப்துல் காதர், நகர துணை செயலாளர்கள் அன்சர், முகமது நசீர், ஆனைமலை ஒன்றியசெயலாளர் அலாவுதீன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.