அதிரை நகராட்சி ஆணையரை சந்தித்தார்! மஜக துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் “மக்களுடன் மஜக” என்ற திட்டத்தின் கீழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் அவர்களை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர்.

சந்திப்பில் அதிரை பேருந்து நிலையத்தை சுற்றி பண்டிகை கால திடீர் கடைகள் அதிகமாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஆகவே அவர்களுக்கு கடைகள் வைப்பதற்கு மாற்று இடத்தை வழங்க வேண்டும் எனவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நகராட்சி ஆணையரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் அவர்கள் இது குறித்து உடனடியாக பரிசீலிப்பதாக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

நிகழ்வில் மாவட்ட செயலாளர் அதிரை ஷேக், மாவட்ட துணைச் செயலாளர் பைசல் அகமது, நகர செயலாளர் மர்ஜூக், நகரத் துணைச் செயலாளர் பாசித், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.