You are here

ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி… திட்டச்சேரி பேரூராட்சியில் மஜக கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்..!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அண்ணல்.அம்பேத்கர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர். அண்ணா, கர்மவீரர்.காமராஜர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர்களின் பெயர்களை புறகணித்தும், வாசிக்க மறுத்து, தேசிய கீதம் இசைக்கும் முன் சபையை விட்டு வெளியேறி அவமதிப்பு செய்த தமிழ்நாடு ஆளுநர் RN.ரவி அவர்களை ஒன்றிய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என

திட்டச்சேரி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி திட்டச்சேரி திமுக பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி உறுப்பினருமான முஹம்மது சுல்தான் MC அவர்களும், மஜக தலைமை செயற்குழு உறுப்பினரும், பேரூராட்சி உறுப்பினருமான S.செய்யது ரியாசுதீன் MC அவர்களும் திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களிடம் மனு அளித்தனர்.

அதனை தொடர்ந்து அனைத்து பேரூராட்சி உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடன் தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி அவர்களை ஒன்றிய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Top