கன்னியாகுமரி மாவட்ட ஆலோசனை கூட்டம்.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நேற்று (12/01/2023) மாவட்ட செயலாளர் பிஜூருள் ஹபீஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுக்கும் “மக்களுடன் மஜக 2023” செயல் திட்ட பணியை மாவட்ட முழுவதும் மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும் எதிர்வரும் ஜனவரி 17 அன்று தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கே எஸ் ரபிக், மாவட்ட மீனவர் அணி செயலாளர் அந்தோணி அலங்காரம், மாநகரச் செயலாளர் மாஹீன் இப்ராஹிம், மாநகரத் துணைச் செயலாளர் சையது முகமது, மாநகர இளைஞரணி துணைச் செயலாளர் அபுதாஹிர், கோட்டார் கிளை பொருளாளர் மைதீன், கோட்டார் கிளை துணை செயலாளர் தர்வேஸ் மீரான், மற்றும் உறுப்பினர்கள் குமரேசன், சாகுல், அஷ்ரப் அலி, ஆகியோர் கலந்து கொண்டனர்.