உமர் பாரூக் தாவூதி ஹஜ்ரத் இல்லத்திற்கு பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வருகை!

ஜமாத்துல் உலமா சபையின் கெளரவ தலைவரும், ஈரோடு தாவூதிய்யா அரபுக்கல்லூரியின் முதல்வருமான மதிப்புக்குரிய உமர் பாருக் தாவூதி ஹஜ்ரத், அவர்கள் கடந்த 18.12.2022 அன்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற ஈரோடு வருகை புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அவரது இல்லத்திற்கு சென்றார்.

அங்கு அவரது மகனும், மஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மண்டல செயலாளருமான ஈரோடு எக்சான் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஹஜ்ரத் அவர்களின் ஆழமான மார்க்க அறிவு, சமுதாய சிந்தனைகள், நாட்டுப்பற்று, நல்லிணக்க சிந்தனைகளை நினைவு கூர்ந்த பொதுச் செயலாளர் அவர்கள், மஜக-வின் அரசியல் பணிகள் மீது அவர் கொண்டிருந்த ஆர்வத்தையும் நினைவு கூர்ந்தார்.

தாவூதிய்யா அரபிக் கல்லூரியின் தற்போதைய முதல்வர் ஹுசைன் தாவூதி ஹஜ்ரத் மற்றும் ஈரோடு மண்டல ஜமாத்துல் உலமா செயலாளர் A.சாதிக்பாஷா தாவூதி, R.S.சாதிக், முத்தவல்லி பூம்புகார் நகர் பள்ளிவாசல் முத்துபாவா, 7-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆகியோர் அங்கு அவரை சந்தித்து பேசினார்கள்.

மறைந்த உமர்பாரூக் ஹஜ்ரத் அவர்கள் எழுதிய ‘குர்ஆன் வன்முறையை தூண்டுகிறதா? என்ற நூலை பொதுச்செயலாளருக்கு தாவூதிய்யா முதல்வர் ஹுசைன் தாவூதி அவர்கள் வழங்கினார்.

அப்போது மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்சா, அவர்களும் உடனிருந்தார்.

இந்நிகழ்வில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷபீக், மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், கிழக்கு மாவட்ட பொருளாளர் பாபு, மேற்கு மாவட்ட பொருளாளர் பவானி சாதிக், இளைஞரணி மாவட்ட செயலாளர் திலீப்குமார், அக்ரஹாரம் பகுதி செயலாளர் ஜாவித், கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் ஹாரிஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பாசித், மீரான், சுல்தான் பேட்டை கிளை நிர்வாகிகள் ரியாஸ்,ஜாவித்,
சித்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.