ஒருசார்பு முழக்கங்களை தவிர்த்து பொது முழக்கங்களை எழுப்புவோம்! : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!

ஜன 10

இன்று சென்னை சைதாப்பேட்டையில் CAA, NRC, NPR சட்டங்களை எதிர்த்து கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது..

மத்திய அரசுக்கு எதிரான மக்களின் இப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது.

எனவே இதில் பங்கேற்கும் தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் . உங்கள் கருத்துகள் பிறரை போராட்டத்திற்கு ஆதரவாக மாற்றும் வகையில் இருக்க வேண்டும் .

போராட்டங்களில் அனைவரும் முழங்கும் வகையில் பொதுவான முழக்கங்களை எழுப்ப வேண்டும் . ஒரு சார்பு முழக்கங்களையும், கொள்கை சார்ந்த முழக்கங்களை தவிர்க்க வேண்டும் .

ஃபாஸிசத்தை ஒழிப்போம்; சமூக நீதி காப்போம்

ஜெய்ஹிந்த்,

இந்தியா ஜிந்தாபாத்,

இன்குலாப் ஜிந்தாபாத்,

மக்கள் ஒற்றுமை ஒங்குக

போன்ற முழக்கங்களை எழுப்புங்கள் அல்லது கை தட்டி ஆதரவுகளை வழங்குங்கள் .

ஃ பாஸிஸ்டுகளுக்கு எதிரான இப்போராட்டம் இந்தியாவை பாதுகாக்க நடத்தப்படுகிறது

எனவே, அனைவரையும் உள்ளடக்கிய இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை பொது தன்மையோடு முன்னெடுப்பதில் அனைவரும் அக்கறை காட்ட வேண்டும் .

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான மஜகவினரும் பங்கேற்றனர்.

சைதாப்பேட்டை பகுதியில் ஆர்ப்பாட்ட கூட்டம் எங்கும் தேசிய கொடிகளாகவே தெரிந்தது.

தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்சென்னைமேற்கு_மாவட்டம்
10.01.2020