அம்பேத்கரின் அரசியல் சாசனங்களை அழித்து பாஜக கொண்டு வந்துள்ள கருப்புச் சட்டங்களை விரட்டியடிப்போம்!

#மேட்டுப்பாளையத்தில் மஜக பொருளாளர் எஸ்எஸ் ஹாருண்ரஷீது சூளுரை!!

ஜனவரி.10.,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களான CAA, NRC -க்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் எழுச்சியால் அமைதி வழியில் போராட்டங்கள் பேரணிகள் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு பேசும் போது CAA, NRC போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் மேலும் வீரியமடைய வேண்டும் என்று கூறினார்,

மேலும், அவர் பேசும் போது அம்பேத்கரின் அரசியல் சாசனங்களை அழித்து பாஜக கொண்டு வந்துள்ள இந்த கருப்புச் சட்டங்களை நாட்டை விரட்டியடிக்க வேண்டும் என்றும் NPR. NRC.போன்ற விவரங்களை கேட்டு நம்முடைய பகுதிகளுக்குள் யார் வந்தாலும் அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று கூறினார்.

இப்பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ், மற்றும் அனைத்து ஜமாத், கட்சிகள், மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் பெரும் திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் துணை பொதுச் செயலாளர் சையது அஹமது பாருக், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் VMT.ஜாபர், மாவட்ட பொருளாளர் ரபிதீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் காஜா மைதீன், R.முஹம்மது அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் யாசர்அரபாத், உமர் பாருக், மற்றும் மாவட்ட, நகர, நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைவடக்குமாவட்டம்
10.01.2020