பெண்களால் போராட்டம் வலிமையடைந்துள்ளது..! புளியந்தோப்பு மண்ணடி தொடர் போராட்டகளத்தில் இணைப் பொதுச் செயலாளர் ஜேஎஸ்ரிஃ பாய் உரை…!

சென்னை.மார்ச்.10.,

குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக நேற்று (09-03-2020) சென்னை வண்ணாரப்பேட்டையைத் தொடர்ந்து புளியந்தோப்பு, மண்ணடி பகுதியிலும் தொடர் காத்திருப்பு போராட்ட களத்தில்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

இந்தியா முழுவதும் பெண்கள் தன்னெழுச்சியாக பங்கேற்று இந்த போராட்டங்களுக்கு வலிமை சேர்ப்பதாகவும், சுதந்திர இந்தியாவின் பல்வேறு போராட்டங்களை எடுத்துரைத்து பேசினார்.

இந்நிகழ்வுகளில் இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன், மாணவர் இந்தியா மாநிலப் பொருளாளர் பஷீர் அஹமது, வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் அன்வர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் அப்பாஸ் மற்றும் மூசா ஆகியோர் உடனிருந்தனர்.

#தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வடசென்னைமாவட்டம்
09-03-2020