CAA, NRC, NPR குறித்து தமிழகமுதல்வருடன்சந்திப்பு..!

சென்னை.ஜனவரி.10..,

இன்று தமிழக முதல்வரை கூட்டமைப்பு சார்பில் ஜமாத்துல் உலமா தலைவர் மவ்லவி காஜா மொய்தீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமையில், ஒருங்கிணைப்பாளர்கள் மவ்லவி மன்சூர் காசிமி, கோனிகா பஷீர் முன்னிலையில் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி, SDPI, INL உள்ளிட்ட கட்சிகள், JAQH, JIH உள்ளிட்ட இயக்கங்களின் தலைவர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அளித்தனர்.

இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஹாரூண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா ஆகியோர் பங்கேற்றனர்.

கோரிக்கைகளையும், விளக்கங்களையும் பெற்றுக் கொண்ட முதல்வர் அவர்கள், இது குறித்து தன் கட்சி தலைவர்கள், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் விசாரித்து உரிய முயற்சிகள் எடுப்பதாகவும், தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் யாரும் பாதிக்கப்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும், இது 100 சதவீதம் உத்தரவாதம் என்றும் கூறினார். நீங்கள் எல்லோரும் எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்றும் அவர் கூறினர்.

தலைவர்கள் அனைவரும் முதல்வரின் வார்த்தைகளை நம்புவதாகவும், நல்ல முடிவுகளை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம் என்றும் கூறி, அனைவரும் முதல்வருடன் நின்று படம் எடுத்துக் கொண்டனர்.

அது போல் இன்று இதே கோரிக்கைக்காக கோவை, திருப்பூர், வேலூர் பகுதிகளை சேர்ந்த ஐக்கிய ஜமாத்தினரும் முதல்வரை சந்தித்தனர்.

முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கருணாஸ் தலைமையில் ஒரு குழுவும் இதே கோரிக்கையை முதல்வரை சந்தித்து கையளித்தது.

பீஹார், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநில அரசுகளை போல தமிழக அரசும் இதில் நல்ல முடிவெடுக்க வேண்டும் என தமிழகம் எதிர்பார்க்கிறது.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
10-01-2020