உதவி ஆய்வாளர் வில்சன் கொலை..! மஜக பொதுச் செயலாளர் முதமிமுன் அன்சாரி MLA கடும் கண்டனம்..!

கன்னியாக்குமரி மாவட்டம் களியாக்காவிளை அருகில், சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

தனது பணியில் ஈடுபாடு காட்டி கடமையில் இருந்த ஒரு அதிகாரி கொல்லப்பட்டிருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

விரைவில் அவர் ஒய்வு பெறவிருந்ததாக அறியும்போது, நம் வேதனை இரட்டிப்பாகிறது.

தன் பணி ஒய்வுக்கு பிறகு, எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என அவர் என்னென்ன கனவு கண்டாரோ என நினைக்கும் போது மனம் கலங்குகிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எமது உள்ளார்ந்த ஆறுதலை தெரிவித்து அந்த துயரில் நாங்களும் பங்கேற்கிறோம்.

அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடாக தமிழக அரசு 25 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், இதில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
09.01.2020