சென்னை.ஜனவரி.09..,
இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், CAA தொடர்பாக தங்கள் தீர்மானத்தை எப்போது எடுத்துக் கொள்வீர்கள் என எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் சபாநாயகரை பார்த்து கேட்டார்.
அதை ஆதரித்து தமிமுன் அன்சாரி MLA அவர்களும் எழுந்து நின்றார்.
சபாநாயகர் அவர்கள் சிரித்துக் கொண்டே “அது இப்போதும் ஆய்வில் தான் இருக்கிறது” என்றதும் திமுக MLA-க்கள் மட்டும் இதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
சபாநாயகரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும் வெளிநடப்பு செய்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது கூறியதாவது,
நாங்கள் CAA, NRC, NPR தொடர்பாக, கொடுத்த அவசர முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து செவ்வாய் கிழமை கேட்டப் போது, அது ஆய்வில் இருப்பதாக சபாநாயகர் கூறினார்.
இன்று கூட்டத்தொடரின் கடைசி நாள். எனவே இன்று அது பற்றி கேட்டதற்கும், சிரித்துக் கொண்டே அது இன்றும் ஆய்விலேயே இருக்கிறது என்கிறார்.
அவர் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பார்க்கிறாரா,? கள நிலவரங்கள் தெரிகிறதா? என்றே தெரியவில்லை.
மக்கள் வீதிகளில் கொந்தளிக்கிறார்கள். குடியுரிமை தொடர்பான அச்சத்தில் இருக்கிறார்கள். எங்கள் வயிறு எரிகிறது. ஆனால் சபாநாயகரோ அதை எல்லாம் புரியாமல் சிரிக்கிறார். அவர் பதிலும், இதை மறுத்த விதமும் உண்மையிலேயே எங்களுக்கு வேதனையளிக்கிறது. அதனால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.
பிறகு பத்திரிக்கையாளர்கள் இன்று அவைக்கு வரும் போது, நீங்கள் போருக்கு எதிராக பேனர் ஏந்தி வந்தீர்களே? என்றனர்.
மத்திய கிழக்கில் திட்டமிட்டே அமெரிக்கா போரை தூண்டுகிறது. ஈரான் ராணுவ தளபதியை அமெரிக்கா கொன்றது கண்டிக்கத்தக்கது. போர் உருவானால் உலக அமைதி கெடும். ஈரானிலிருந்துதான் அதிகமான கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு இறக்குமதி ஆகிறது. போர் உருவானால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கும். ஈரான் இந்தியாவின் பாரம்பர்யமான நட்பு நாடு.
எனவே தான் போருக்கு எதிராக அமைதியை வலியுறுத்தி எனது எதிர்ப்பை பதிவு செய்தேன் என்றார்.
பிறகு அவரை சந்தித்த நடிகர் வாகை. சந்திரசேகர் MLA அவர்கள் , உங்கள் எதிர்ப்புகளும், பணிகளும் ஜனநாயகப்பூர்வமாக சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டினார்..
வரும் வழியில் எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், கொறடா சக்கரபாணி ஆகியோருக்கு மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்