நாகையில் டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மஜக போராட்டம் திரளானோர் பங்கேற்பு!


டிச.13.,

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதை தொடர்ந்து 12.12.2020 அன்று நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையேற்று இப்போராட்டத்தை முன்னெடுத்தது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அன்வர்தீன்,அவர்கள் தலைமை தாங்கினார், குவைத் மண்டல துணை செயலாளர் பாசில் கான், தொகுத்து வழங்கினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப்தீன் அவர்கள் மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரை நிகழ்த்தினார்.

மேலும் பகுருதீன், ச.தமிமுன் அன்சாரி, ஆதினங்குடி சாகுல், பிரவின், உள்ளிட்ட மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் அசார், யாசின், மற்றும் திட்டச்சேரி நகர செயலாளர் இப்ராகிம், நாகூர் நகர பொருளாளர் சாகுல், ஆகியோர் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இறுதியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் நிசாத், நன்றியுரை நிகழ்த்தினார்.

இதில் மாவட்ட அணி நிர்வாகிகள் , திட்டச்சேரி, நாகூர் நகர நிர்வாகிகள் மற்றும் ஆதலையுர், ஏனங்குடி, கேதாரிமங்கலம், ஆதினங்குடி, திருமருகல், வவ்வாலடி, கோட்டூர், உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
12.12.2020