போராட்ட விளம்பரங்களில் கூடுதல் கவனம்… மஜக வட சென்னை (மே), திருவள்ளுர் (கி), மத்திய சென்னை (மே) மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு!

ஜனவரி 8, 2022 அன்று பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கோவை சிறை முற்றுகை போராட்டம் பலத்த ஆதரவை பெற்றுள்ள நிலையில் சென்னையில் மஜக-வினர் தீவிரமாக களத்தில் குதித்துள்ளனர்.

ஆயத்த பணிகளின் தொடர்ச்சியாக இன்று மத்திய சென்னை மேற்கு, திருவள்ளுர் கிழக்கு, வட சென்னை மேற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளின் நேர்காணலில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று கலந்துரையாடினார்.

அவருடன் துணைப் பொதுச் செயலாளர் N.A. தைமிய்யா அவர்களும், மாநில துணைச்செயலாளர் பல்லாவரம் ஷஃபி ஆகியோர் பங்கேற்றனர்.

ஜனவரி 8 போராட்டம் குறித்து அதிக அளவில் சுவர் விளம்பரங்கள் செய்வது குறித்தும், பரப்புரைகளில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களை திரட்டுவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

விரைவில் மாவட்ட வாரியாக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதில் இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், மாணவர் இந்தியா பொருளாளர் பஷீர் ஆகியோரும் பங்கேற்றனர்.

மத்திய சென்னை மேற்கு மாவட்டம், திருவள்ளுர் கிழக்கு மாவட்டம், வட சென்னை மேற்கு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

#ReleaseLongTermPrisoners

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
14.12.2021