ஈரோடு.பிப்.17..,
மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்டம் சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டங்களை (CAA, NRC, NPR) கண்டித்தும், மேலும் சென்னை வண்ணாரப்பேட்டையில் அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்தும் ஈரோடு பெரிய அக்ரஹாரம் அரபிக் கல்லூரி அருகில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் ஜமாத்துல் உலமா கௌரவ ஆலோசகர் உமர் பாரூக் தாவூதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஈரோடு மாவட்ட செயலாளர் சபிக் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் பாப்பா மோகன் ஆகியோர் எழுச்சி உரை நிகழ்த்தினார்கள்.
மேலு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் செய்யது அகமது ஃபாருக், மாநில துணைச் செயலாளர்கள் சமீம் அஹமது, பாபு சாகின்ஷா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மக்கள் ராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்ஜிஆர் மன்ற செயலாளர் சன்ரைஸ் லோகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரகுராமன், திராவிட விடுதலைக் கழகம் மாவட்டச் செயலாளர் ரத்தினசாமி, ஈரோடு மாவட்ட மஸ்ஜிதுகள் பேரவை செயலாளர் ஹாஜி ஹனிபா, திராவிட இயக்க தமிழர் பேரவை செயலாளர் தமிழ்குமரன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட தலைவர் சித்திக், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சலீம், IUML மாவட்ட தலைவர் நூர் சேட், SDPI கட்சியின் மாவட்டத் தலைவர் ஹாஜி அசன், TMJK பேச்சாளர் தர்மா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இதில் TNTJ மாவட்டச் செயலாளர் சாகுல், SDTU மாநிலச் செயலாளர் அசன் பாபு, SDPI மாவட்ட பொதுச்செயலாளர் லுக்மான், மேற்கு மாவட்ட செயலாளர் ஷானவாஸ், மேற்கு மாவட்ட பொருளாளர் சாதிக், மாநில செயற்குழு உறுப்பினர் எக்ஸான், மாவட்ட துணைச் செயலாளர்கள் பாபு, பெருந்துறை ஜாஃபர் பக்கீர் முகமது, குலாம் முஸ்தபா, ரியாஸ் மாவட்ட தொழிற்சங்க தலைவர் சபர், செயலாளர் பசீர் அஹமது, மாவட்ட இளைஞரணி செயலாளர் திலீப், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் தமீம் கான், பொருளாளர் அப்துல் ரகுமான், மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் யாசர், பகுதி செயலாளர் பாரூக், ஜாவித், சல்மான். இம்தியாஸ், அப்துல் ரஹ்மான், நபீல், மற்றும் உலமாக்கள் உள்ளிட்ட அணைத்து இயக்கங்ளின் நிர்வாகிகள், உலமாக்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றியுரை மாவட்டப் பொருளாளர் முஹம்மது அலி நிகழ்த்தினார்.
இறுதியாக மாணவர் இந்தியாவின் கறுப்பு சட்ட எதிர்ப்பு கலை நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது..
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஈரோடுகிழக்குமாவட்டம்
16-02-2020