சென்னை.பிப்.18,
சட்டமன்றத்திற்கு வண்ணாரப்பேட்டை போலிஸ் அத்துமீறலை கண்டித்து பதாகை ஏந்தி வந்து, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்மொழிந்து இவ்விவாகரம் தொடர்பான கருத்துகளை, மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
இதற்கு முதல்வரின் பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறிவிட்டு, வெளிநடப்பு செய்தவர், எங்கள் உணர்வுகள் நிராகரிக்கப்பட்டதால், பிப்-19 அன்று 1 லட்சம் பேருடன் சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்தார்.
அதன் பிறகு நேராக வண்ணாரப்பேட்டை “ஷாஹின் பாக்” போராட்ட களத்துக்கு சென்றார்.
அங்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கு அவர் பேசியதாவது..
உங்கள் மீதான வன்முறைகளை கண்டித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினேன்.
முதல்வர் அவர்கள் அதிகாரிகள் எழுதி கொடுத்ததை பேசி, தவறான தகவலை அவைக்கு கொடுத்தார்.
அதனால் அதை கண்டித்து வெளிநடப்பு செய்து விட்டு, நேராக இங்கே வந்துள்ளேன்.
இங்கு போக்குவரத்துக்கு தொந்தரவு இல்லாமல், தங்கள் வீதிக்குள் மக்கள் போராடுகிறார்கள். குழந்தைகளோடு பெண்கள் களமாடுகிறார்கள். இது வலிமை மிக்க மக்கள் எழுச்சியாகும்.
போக்குவரத்துக்கு தொந்தரவு இல்லாமல், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கண்ணியமாக உரிமைகளுக்காக போராடுகிறீர்கள்.
உங்களை அத்துமீறி காவல்துறை தாக்கியதும், இரவு 10 மணி, 11 மணி என்று கூட பாராமல் தமிழகமெங்கும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் பரவியது. அந்த அளவிற்கு இப்போராட்டம் பலமிக்கதாக மாறிவிட்டது.
சாமானிய மக்கள், தொழிலாளர்கள், ஏழைகள் போராடுகிறீர்கள். உங்கள் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மதிக்க வேண்டும்.
நாம் 2024 மே மாதம் வரை கூட போராட வேண்டி வரும். வடிவங்கள் மாறலாம். போராட்டம் தொடரும்.
எனவே யாரும் நிதானம் இழக்க கூடாது. உணர்ச்சி வசப்படக் கூடாது. யாராவது சீண்டினால், சகித்துக் கொண்டு போராட பழக வேண்டும்.
https://m.facebook.com/story.php?story_fbid=2281276091972153&id=700424783390633
சிலர் நம்மிடமிருந்து வன்முறையை எதிர்பார்க்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொறுமையை கையாள வேண்டும்.
இங்கு போராட்ட குழுவுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை முன் வைக்கிறேன். இங்கு உணர்ச்சி வசப்பட்டு, யாரையும் புண்படுத்தும் வகையில் பேச அனுமதிக்காதீர்கள். தனி நபர் விமர்சனங்கள் வேண்டாம். கோரிக்கையை மட்டுமே முன்னிறுத்தி பேச சொல்லுங்கள்.
தவறான முகம் சுழிக்கும் முழக்கங்களை எழுப்ப அனுமதிக்காதீர்கள். முழக்கங்களை வாங்கி படித்து சரி பார்த்து விட்டு பிறகு அனுமதியுங்கள்.
அமைதி வழியில் தொடர்ந்து போராடுவோம். இந்துக்கள், முஸ்லிம்கள், கிரித்தவர்கள், தலித்துகள் நம்மோடு இணைகின்றனர். மதத்தால் பிரிக்க நினைத்தவர்கள் தோற்றுவிட்டனர்.
தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறோம்.
பிப்ரவரி-19 அன்று 1 லட்சம் பேருடன் சட்டமன்றத்தை முற்றுகையிட உள்ளோம்.
இன்னும் 48-மணி நேரம் அவகாசம் உள்ளது. நீங்கள் சட்டமன்றத்தில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் நாங்கள் போராட்டத்தை ரத்து செய்கிறோம். நாங்கள் மிரட்டவில்லை. வேண்டுகோளை தான் முன் வைக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவருடன் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மன்சூர் காஸிபி, பஷீர் ஹாஜியார், மஸ்ஜித் கூட்டமைப்பு தலைவர் பஷீர், மஜக துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், ஷமீம், இளைஞர் அணிச் செயலாளர் அஸாருதீன், வட சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் தாரிக், மேற்கு மாவட்டச் செயலாளர் அன்வர், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹீர், lKP மாநில துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான், உள்ளிட்டோர் அவருடன் உடன் சென்றனர்.
முன்னதாக மாணவர் இந்தியா சார்பில் கலை வடிவ முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
17-02-2020