சட்டசபையில் இருந்து மஜக பொதுச்செயலாளர் முதமிமுன்அன்சாரி வெளிநடப்பு..!

இன்று நடந்த சட்டப்பேரவையில், வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து உரையாற்றினார்.

அதற்கு முதல்வர் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறியும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற மறுப்பதை கண்டித்தும் வெளிநடப்பு செய்தார்.

அப்போது நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அரசின் செயல்பாடு வருத்தம் அளிப்பதாகவும், எதிர்வரும் பிப்ரவரி 19 அன்று ஒரு லட்சம் மக்கள் ஒன்றுகூடி சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்.. தற்பொழுது நேராக வண்ணாரப்பேட்டை போராட்ட களத்திற்கு செல்லவதாகவும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டசபை_வளாகம்
17-02-2020