▪மு.தமிமுன் அன்சாரி கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு , 8 மாதம் கழித்து நானும் முக்குலத்தோர் புலிப் படை தலைவர் சகோதரர் கருணாசு அவர்களும் சந்திந்துக் கொண்டோம். இடையில் அவ்வப்போது அலைபேசி வழியாக நலன் விசாரித்துக் கொள்வோம். சந்திக்கும் வாய்ப்புகள் அமையவில்லை. அரசியலில் வெவ்வேறு அணிகளில் இருக்கலாம். தனித்தனி கருத்துகள் இருக்கலாம்.அது வேறு. அரசியலை விட பண்பாடு ஒரு படி உயர்ந்தது அல்லவா? அரசியலை கடந்து தனியரசு, கருணாசு என நாங்கள் மூன்று பேரும் சகோதரத்துவத்தை பேணி வருகிறோம். தமிழ் சமூகங்களின் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும் பாலமாக அந்த உறவை வளர்த்து வருகிறோம். இன்று நானும், அவரும் தஞ்சையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்றாக அமர்ந்து உணவருந்தினோம். தேவர் குருபூஜை காரணமாக அவர் விரதம் இருப்பதால் அது சைவ விருந்தாக அமைந்தது. சட்டமன்ற விடுதியில் எனது அறைக்கு வரும் போது எப்போதுமே அசைவம்தான் வேண்டும் என விரும்புவார். இன்று விரதம் காரணமாக விதிவிலக்கு. சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் அவர் நடித்த சங்கத் தமிழன் என்ற படத்தை பற்றி அவரிடம் பேசினேன். அவர் சமுத்ரகனியுடன் இணைந்து போராட்டக்காரராகவும்: தொழிற்சங்கவாதியாகவும் சிறப்பாக நடித்திருந்தார். தற்போது நிறைய படங்களில் நடித்து வருவதாகவும்,
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
இலங்கை கடற்படை அட்டூழியம் கோட்டைப்பட்டிணம் மீனவர் படுகொலை..! நீதி கேட்டு மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டகளத்தில் மஜக..!
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் ஒன்றிய அரசை கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கை கடற்ப்படையால் தாக்கப்பட்டு, கடலில் மாயமாகி உயிரிழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள ராஜ்கிரணின் உடலை ஒப்படைக்க கோரி இலங்கை அரசையும் இந்திய ஒன்றிய அரசையும் கண்டித்தும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகிறார்கள். இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, கந்தர்வக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம், விவசாய அணி மாநில துணை செயலாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ், மாவட்ட பொருளாளர் சாஜிதீன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் ஷாஜஹான், ஒன்றிய செயலாளர் முஜிபுர் ரஹ்மான், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். மேலும் இந்த தொடர் போராட்டத்தின் கோரிக்கைகள் வெற்றி பெற வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்கள். உடன் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம் 21.10.2021
மஜக இளையான்குடி நகர செயற்குழு கூட்டம்! மாநில பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள்_பங்கேற்பு!
மனிதநேய ஜனநாயக கட்சி சிவகங்கை மாவட்ட இளையான்குடி நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், அவை தலைவர் நாசர் உமரி, இணை பொதுச் செயலாளர் J.S.ரிபாயி, மாநில துணை செயலாளர் பொறியாளர் சைபுல்லாஹ், ஆகியோர் பங்கேற்று இளையான்குடி நகரத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இந்நிகழ்வில் நகர, அணி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #சிவகங்கை_மாவட்டம்
மஜக தென்காசி மாவட்ட சிறப்பு நிர்வாக குழு கூட்டம்! மாநில பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட சிறப்பு நிர்வாக குழு கூட்டம்மாவட்டச் செயலாளர் பீர் மைதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், அவை தலைவர் நாசர் உமரி, இணை பொதுச் செயலாளர் J.S.ரிபாயி, ஆகியோர் பங்கேற்று மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாக கட்டமைப்பு பணிகள் குறித்தும், நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட, அணி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்காசி_மாவட்டம்
கன்னியாகுமரியில் பாசிச ஒன்றிய அரசை எதிர்த்து மஜகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
அசாமில் நடந்த அரச பயங்கரவாதத்தை கண்டித்தும், லக்மிபூர் விவசாயிகள் மீது நடந்த கொலை வெறித் தாக்குதலை கண்டித்தும், இளைஞர்களை வழி கெடுக்கும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கோரியும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்ப.பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜிப் ரகுமான், அமீர்கான், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மஜக நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (ML) மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணி முத்து, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநகர செயலாளர் இடலை சாகுல், கன்னியாகுமரி மாவட்ட கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஹிமாம் பாதுஷா, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் மாரிமுத்து, ஆகியோர் பங்கேற்று ஒன்றிய அரசை கண்டித்து உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி, மாநகர செயலாளர்