அசாமில் நடந்த அரச பயங்கரவாதத்தை கண்டித்தும், லக்மிபூர் விவசாயிகள் மீது நடந்த கொலை வெறித் தாக்குதலை கண்டித்தும்,
இளைஞர்களை வழி கெடுக்கும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கோரியும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்ப.பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜிப் ரகுமான், அமீர்கான், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மஜக நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (ML) மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணி முத்து, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநகர செயலாளர் இடலை சாகுல், கன்னியாகுமரி மாவட்ட கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஹிமாம் பாதுஷா, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் மாரிமுத்து, ஆகியோர் பங்கேற்று ஒன்றிய அரசை கண்டித்து உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி, மாநகர செயலாளர் மாஹீன் இப்ராஹிம், மாநகர பொருளாளர் ஐயப்பன், மாநகர துணை செயலாளர்கள் பைசல் இம்ரான், சையத் முகம்மது, மாநகர இளைஞரணி செயலாளர் சமீர், மாநகர இளைஞரணி பொருளாளர் வேல்முருகன், கிளை நிர்வாகிகள், மற்றும் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
18.10.2021