தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள், ஆய்வு பணிக்காக கோவை மத்திய சிறைக்கு வருகை தந்துள்ளார்.
அவரை மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. முக.ஸ்டாலின், அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அண்ணா பிறந்த நாளையொட்டி 700 சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்ததை வரவேற்கிறோம்,
அது போல் 10, ஆண்டுகளைக் கடந்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை ஜாதி மத பேதமில்லாமல் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம், மேலும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம், அதுபோன்றே 14 ஆண்டுகள் சிறையில் கழித்த அனைத்து சிறைவாசிகளையும் ஜாதி, மத, பேதமில்லாமல் வழக்கில் பாகுபாடு காட்டாமல் அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து விரிவான பட்டியலை அமைச்சர் அவர்களிடம் மஜக நிர்வாகிகள் அளித்தனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அவர்கள் இது தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், ஆகியோர் பங்கேற்றனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
18.10.2021