நீடூர்.டிச.06., மயிலாடுதுறை மாவட்டம் நீடுர் – நெய்வாசலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 12 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் N.M. மாலிக் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது.
மழையை முன்னிட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த நிலையில், திரளான உள்ளுர் மக்கள் பங்கேற்று தங்கள் பேராதரவை மஜகவுக்கு வழங்கினர்.
இதில் தொடக்கவுரையாற்றிய நீடுர் JMH அரபிக் கல்லூரி முதல்வர் மெளலவி இஸ்மாயில் பாஜில் பாகவி அவர்கள் பேசும் போது, மஜகவின் பணிகளை சிலாகித்து பேசினார்.
மாநிலச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் கோவை சிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தி சிறப்பாக பேசினார்.
பிரபல பாடகர் தேரிழந்தூர் தாஜ்தீன் அவர்கள்’ மலையாள கரைதனிலே ரத்தாற்று ஒட்டம்’ என்ற நாகூர் அனிபா வின் பாடலை பாடி அரங்கில் விடுதலை எழுச்சியை மீட்டுறுவாக்கம் செய்து கைத்தட்டலை பெற்று சென்றார்.
வாழ்த்துரை வழங்கிய முன்னாள் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரான பால அருட்செல்வன் பேசும் போது, பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் சட்டமன்ற பணிகளையும், சமூக நல்லிணக்க பணிகனையும் சிலாகித்து பேசினார்.
இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசும் போது, மஜக சமாதான பறவைகளின் கூடாரம் என்றும், இங்கு சீசனுக்கு வந்து போகும் வேடந்தாங்கள் பறவைகளுக்கும், வேடம் தாங்கும் பறவைகளுக்கும் இடமில்லை என்றும், பதவிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாங்கள் மக்கள் பணிகளில் நிற்போம் என்று கூற பலத்த ஆராவாரம் எழுந்தது.
பிறகு பொதுச் செயலாளர் அவர்கள் அரை மணி நேரம் ஒவ்வொரு தொண்டரிடமும் நின்று படம் எடுத்துக் கொண்டு, அவர்களின் நலம் குறித்தும் விசாரித்தறிந்தார்.
முன்னதாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்புக்கு பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் பழைய நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியை மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் தொகுத்து வழங்க, தகவல் தொழில் நுட்ப அணி மாநிலச் செயலாளர் ஹாரிஸ் தலைமையிலான குழு முகநூலில் நேரலை செய்தது.
உலகத் தமிழர் பண்பாட்டு கழக தலைவரும் நீடூர் தீன் கல்லூரி நிறுவனருமான TSR ரபியுதீன், JMH அரபிக் கல்லூரி பொதுச்செயலாளர் எஸ்கொயர் சாதிக், ராஜ்ஹூசைன், தாய்லாந்து தொழிலதிபர்கள் நளீம், ஜர்ஜிஸ், அய்யுப் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், பல்வேறு உள்ளுர் சங்கங்களின் நிர்வாகிகள், பல கட்சி பிரமுகர்கள் என நீடூர் – நெய்வாசல் பிரபலங்கள் வருகை தந்து ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்புக்கு தங்களது வாழ்த்துக்களை கூறினர்.
இதில் மாநில துணை செயலாளர் காயல் சாஹூல் ஹமீது, மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம், மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் மஹரூப், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், குவைத் மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ், குவைத் மண்டல தொண்டரணி செயலாளர் ஆயங்குடி அபுல் உசேன், அரியளூர் அக்பர், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாஹிர், தஞ்சை மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லாஹ், குடந்தை நிஜாம், மயிலாடுதுறை மாவட்ட பொருளாளர் ஆக்கூர் சாஜஹான், துணை செயலாளர்கள் ஹாஜா சலீம், மிஸ்பாஹூதீன், அஜ்மல் உசேன், அசன் அலி, விவசாய அணி செயலாளர் லியாகத் அலி, மருத்துவ சேவை அணி செயலாளர் நூருல் அமீன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் குர்சித் கான், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் ஜெப்ருதீன், மயிலாடுதுறை நகர செயலாளர் பாபு, நீடூர் நெய்வாசல் நகர செயலாளர் அசார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_மயிலாடுதுறை_மாவட்டம்
05.12.21