You are here

ஜனவரி.08 கோவை சிறைச்சாலை முற்றுகை! மனிதநேய ஜனநாயக கட்சி அறிவிப்பு!

டிசம்பர்.07.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாக குழு கூட்டம் இன்று தஞ்சையில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.

இதில் கட்சி வளர்ச்சி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு திட்டமிடல்கள் வகுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை குறித்து விவாதிக்கப்பட்டது.

விவாதத்தின் முடிவில், தமிழகம் முழுவதும் உள்ள ஆயுள் தண்டனை சிறைக் கைதிகளை பொதுமன்னிப்பில் சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்யக்கோரி எதிர்வரும் ஜனவரி 08.2022 அன்று கோவையில் உள்ள மத்திய சிறைச்சாலையை முற்றுகையிட்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

இதில் தேசிய பிரமுகர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூகநீதி ஆளுமைகள் என முன்னிலை ஏற்று ஆயிரக்கணக்கானோர் களம் காண்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

(இதர தீர்மானங்கள் மற்றும் செய்திகள் பின்னர் வெளியிடப்படும்)

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_தலைமையகம்.
07.12.2021

Top