நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் இதில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தில் குறைந்தபட்சம் 4 இடங்களில் போட்டியிடுவது என மனிதநேய ஜனநாயக கட்சி முனைப்போடு உள்ளது.
தேர்தலுக்கான வியூகம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மஜக நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், எந்தந்த வார்டுகளில் போட்டியிடுவது என்றும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் நீஜாமுத்தின், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முபாரக் அஹ்மத், நகர து.செயலாளர் கவுஸ் பாஷா, மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் சாதிக், முஹம்மத் உசேன், நகர இளைஞர் அணி செயலாளர் அல்தாப், மாணவர் இந்தியா ஜீஷான் மற்றும் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
05.12.2021