மார்ச்.29.,
கோவையில் ஜீவ சாந்தி என்ற தொண்டு அமைப்பு மனிதநேய – மத நல்லிணக்க பணிகளை முன்னெடுத்து வருகிறது.
அனாதை பிணங்களை அவரவர் மத சடங்குகளின் படி அடக்கம் செய்வது, ஆம்புலன்ஸ் சேவை, ஏழைகளுக்கு உணவு வழங்குவது ஆகியன அவர்களது முக்கிய பணிகளாகும்.
புனித ரமலானில் சகர் நேர விடிகாலை உணவை தேவையுடையோருக்கு வழங்கும் பணியை 30 நாட்களும் திறன்பட செய்து வருகின்றனர்.
200 பேர் கொண்ட தொண்டூழியர்கள், 19 குழுக்களாக பிரிந்து தினமும் 6 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறார்கள்.
650 கிலோ அரிசி சமைககப்பட்டு தினம் / தினம் சுவையாக விருந்து சமைக்கப்படுகிறது.
கடந்த 7 ஆண்டுகளாக செயல்படும் இவர்களுக்கு பொதுமக்கள் / வணிகர்கள் நிதியுதவி செய்கின்றனர்.
அவர்களின் ‘அன்பாலயம் ‘ இல்லத்திற்கு இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்து
இன்றைய சஹர் உணவு வினியோக பணியை தொடங்கி வைத்தார்.
பிறகு அதன் நிர்வாகிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அங்கு பல்வேறு சமூகங்களை சேர்ந்த காவல் துறை / வழக்கறிஞர் துறை / சமூக சேவை துறை / அரசுப் பணிகள் / தனியார் நிறுவனங்கள் என பலவற்றில் பணிபுரியும் பெண்கள் தன்னர்வத்துடன் பணி புரியும் காட்சிகளை பார்த்து பாராட்டினார்.
பிறகு அதன் நிர்வாகிகள், தொண்டூழியர்கள், சமையல் பணியாளர்கள் அனைவருடனும் அவர்கள் விருப்பப்படி படம் எடுத்துக் கொண்டார்.
பிறகு அவர்களின் சேவைகளை பாராட்டி 10 நிமிடங்கள் பேசினார்.
இந்நிகழ்வில் தலைவருடன் கோவை மாநாகர மஜக-வினரும் உடன் இருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவை_மாவட்டம்
29.03.2024.