ஆம்பூரில்… மஜக சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி….

மார்ச்.29.,

மனிதநேய ஜனநாயக கட்சி, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரம் சார்பில் மாபெரும் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் M.ஜஹிருஸ் ஜமா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத், மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.விஸ்வநாதன் MLA., ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

மேலும் மஜக மாவட்ட துணை செயலாளர்கள் T.R. முன்னா(எ) நஸீர், I.கலீல் பாஷா, ஊராட்சி மன்ற உறுப்பினர் S.M.ஷாநவாஸ்,
மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் R.Z ஜூபேர் அஹ்மத், MJTS மாவட்ட செயலாளர் B. முபாரக் அலி, மாவட்ட இளைஞரணி செயலாளர் H. சையத் வசிம், ஆம்பூர் நகர செயலாளர் A. ஜீஷான் பாஷா, ஆம்பூர் நகர பொருளாளர் டிஷ் நாசிர் அஹ்மத் அலீம் மற்றும் மஜக ஆம்பூர் நகர துணைச் செயலாளர்கள், அணி நிர்வாகிகள், ஜமாத்தார்கள் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என 500-க்கு மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருப்பத்தூர்_மாவட்டம்
28.03.2024.