மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட சிறப்பு நிர்வாக குழு கூட்டம்மாவட்டச் செயலாளர் பீர் மைதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், அவை தலைவர் நாசர் உமரி, இணை பொதுச் செயலாளர் J.S.ரிபாயி, ஆகியோர் பங்கேற்று மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாக கட்டமைப்பு பணிகள் குறித்தும், நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட, அணி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்காசி_மாவட்டம்