ஜன.17., மாணவர்களால் சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்படும் போராட்டத்தில் மாணவர் இந்தியா சார்பில் தண்ணீர் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது . இதில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முகம்மது அஸார் தீன், மாநில துணை செயலாளர் பஷீர் அஹ்மத், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஃபைசல் மற்றும் மத்திய சென்னை மாவட்ட மாணவர் இந்தியா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தகவல் : மாணவர் இந்தியா - ஊடாகபிரிவு, சென்னை, 17_01_17
செய்திகள்
ஆனைமலை மஜக கிளை நிர்வாகம் அமைப்பு!
ஜன.17., பொள்ளாச்சி நகரம் ஆனைமலை கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி நகர செயலாளர் தலைமையில் இன்று 17-01-2017 நடைபெற்றது. நிர்வாகம் சீரமைக்கப்படு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். A.கெய்சர் முகம்மது (கிளை செயலாளர்) 9942112383 K.ஹக்கீம் (கிளை பொருளாளர்) 9487647001 துணை செயலாளர்கள் துரை (எ) A.V. முகம்மது மைதீன் 8148204829 A.ஷாஐகான் 9488325843 A.முகம்மது 8012733015 தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(IT_Wing) பொள்ளாச்சி நகர், கோவை தெற்கு மாவட்டம்
சாலை மறியலில் மதுரை தெற்கு மாவட்ட மாணவர் இந்தியா, மஜக இளைஞர் அணி செயலாளர்கள்…
ஜன.17., இன்று அலங்கா நல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டா அமைப்பை தடைசெய்ய கோரியும் நடந்த மாணவர்கள் மறியல் போராட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் ஏ.அஸ்கர் கான் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பவாசிர் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். தகவல் : மஜக தகவல் தொழில் நுட்ப அணி, மதுரை தெற்கு 17_01_17
அண்ணன் ம.நடராஜன் அவர்களின் கருத்து கூர்ந்து கவனிக்கத்தக்கது
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணைய தள பதிவு) நேற்று(16-01-2017) தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் புதிய பார்வை ஆசிரியர் அண்ணன் ம.நடராஜன் அவர்களின் பேச்சு தமிழக அரசியலில் புதிய அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது. மத்திய அரசும், பாஜகவும் தமிழக அரசை கபளீகரம் செய்ய முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் ஒருபுறம் வலுப்பெற்று வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் திரு.ரஜினிகாந்த் அவர்கள் தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவும் தருணத்தில் சோ அவர்கள் இருந்திருக்க வேண்டும் என்று பேசி சர்ச்சையை உருவாக்கினார். இந்நிலையில், அண்ணன் ம.நடராஜன் அவர்கள், தமிழக அரசை கலைக்க மத்திய பாஜக அரசு சதி செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அத்தோடு நில்லாமல் RSS சிந்தனையாளர் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களின் மீது கடும் விமர்சனம் செய்துள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் RSS சார்பு சுதேசி இயக்கத்தில் பொறுப்பாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு பிராமண நண்பர்கள் உண்டு என்றும், பாஜக ஆதரவு பிராமணர்கள் தங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் குமுறியுள்ளார். சாதி,மதம் பேதமில்லாத தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கப்பார்க்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். இதில் மேலும் கவனிக்கத்தக்கது என்னவெனில், தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் மாணவர் போராட்டத்தில் மாணவர் இந்தியா பங்கேற்பு…
ஜன.17., சென்னை கடற்கரையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடைபெறும் மாணவர் போராட்டத்தில் மாணவர் இந்தியா மாநில பொருளாளர் ஜாவித் ஜாபர் தலைமையில் மாணவர் இந்தியா மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பைசல் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கைது செய்த மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய், மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டுமென மாணவர் இந்தியா மாநில பொருளாளர் ஜாவித் தெரிவித்துள்ளார். தகவல் : மாணவர் இந்தியா ஊடகப்பிரிவு