ஜன.28., காஞ்சி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பல்லாவரம், கண்டோன்மெண்ட், பம்மல், குரோம்பேட்டை உள்ளிட்ட பத்து இடங்களில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சி இன்று 28-01-2017 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீது.MCom., அவர்கள் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார். 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் மஜக கொடிகளுடன் இளைஞர்கள் அணிவகுக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியால் அப்பகுதிகளில் விழாக்கோலம் பூண்டது. மாநில மனித உரிமை அணி செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாவட்ட செயலாளர் சிந்தா மதார், மாவட்ட பொருளாளர் பல்லாவரம் யாகூப் உள்ளிட்ட மாவட்ட, கிளை, பகுதி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. காஞ்சி வடக்கு மாவட்டம். 28.01.2017
செய்திகள்
சேலம் மஜகவின் குடியரசு தின நிகழ்ச்சி…
ஜன.28., மனிதநேய ஜனநாயக கட்சி சேலம் கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட துனை செயலாளர் U.அமீர் உசைன் அவர்களின் தலைமையில் சேலம் முஹமது புறா பகுதியில் 68வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை நாசர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி குடியரசு தின உரையாற்றினார்கள். உறையின் போது இந்தியாவில் உள்ள தலித் மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பேசினார்... பிறகு மாவட்ட செயலாளர் S.இப்ராஹீம் பேசும்போது இந்தியாவின் எல்லை பகுதியில் ஊடுருவும் பாகிஸ்தான் சீனா மற்றும் இலங்கை போன்ற நாடுகளிடமிருந்து இந்திய தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்று பேசினார்... இதில் மாவட்ட துனை செயலாளர் A.ஷேக் ரபி எல்லோரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். இறுதியாக மாவட்ட இளைஞரனி செயலாளர் M.A.மஹபூப் அலி நன்றி கூறினார். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. சேலம் கிழக்கு மாவட்டம். 28.01.17
தொண்டி பள்ளிக்கூட விழாவில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு!
ஜன.28., தொண்டியில் அல் ஹிலால் மெட்ரிக் , அல் ஹிலால் நர்சரி , அமீர்சுல்தான் மெட்ரிக் மற்றும் முனவ்வரா நடுநிலைப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிக்கூடங்களில் ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினர்களாக மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் K.அப்துல் சமது , அக்கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் S. இஸ்மாயில் முகைதீன் ஆகியோர் பங்கேற்று விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தனர் . இந்நிகழ்வில் இக்கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் அல்ஹாஜ் T.M. அமீர் சுல்தான் , அல்ஹாஜ் M. அப்துல் ரவூப் , ஜனாப் A.R.காமில் ஃபரீத் மற்றும் ஊர் பிரமுகர்களும் பங்கேற்றனர் . மாணவ-மாணவிகளுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களும் கலந்து கொண்டனர் . தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT Wing), இராமநாதபுரம் மாவட்டம். 28.01.17
பஹ்ரைன் மண்டல மஜக கருத்தரங்கம்…
ஜன.28.,பஹ்ரைன் மண்டலம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் "மோடி சொன்னதும் - செய்ததும்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் மிக மிக அருமையான முறையில் 27-01-2017 அன்று சவுத் பார்க் ஹோட்டலில் மண்டல செயலாளர் நாச்சிகுளம் ஜான் முகம்மது அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மண்டல துணை செயலாளர் வல்லம் ரியாஸ் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மண்டல துணை செயலாளர் சாவண்ணா, மண்டல ஆலோசகர் ஆரிப், மருத்துவ சேவை அணி செயலாளர் வசீம் ராஜா, தொழில்நுட்ப அணி செயலாளர் அப்துல் சுபகான், செயற்குழு உறுப்பினர்கள் அலாவுத்தீன், சாகுல் ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் உரை நிகழ்த்தினர். இறுதியாக மண்டல பொருளாளர் மன்னை அலி நன்றி கூறினார். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, பஹ்ரைன் மண்டலம். 27.01.17
நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 24ஆம் ஆண்டு விளையாட்டு நிகழ்ச்சிகள்…. நாகை MLA பங்கேற்ப்பு!
ஜன.28., நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 24 வது ஆண்டு விளையாட்டு நாள் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினன் M. தமிமுன் அன்சாரி M.A., MLA., அவர்கள் பங்கேற்று, தேசிய கொடியேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாணவ, மாணவிகளின் கண்கவர் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளளரும், அமீரக தொழிலதிபருமான திரு.ஷேக் தாவூது மரைக்காயர், DSP திரு. புகழேந்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அதிகாரி திரு. சிவா, பள்ளி நிறுவனரும், தொழிலதிபருமான M.S.J. அப்துல் ஹமீது மரைக்காயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் மாநில அளவில் பல போட்டிகளில் தொடர்ந்து வென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 28.01.17