தொண்டி பள்ளிக்கூட விழாவில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு!

image

image

image

ஜன.28., தொண்டியில் அல் ஹிலால் மெட்ரிக் , அல் ஹிலால் நர்சரி , அமீர்சுல்தான் மெட்ரிக் மற்றும் முனவ்வரா நடுநிலைப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிக்கூடங்களில் ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினர்களாக மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் K.அப்துல் சமது , அக்கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் S. இஸ்மாயில் முகைதீன் ஆகியோர் பங்கேற்று விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தனர் .

இந்நிகழ்வில் இக்கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் அல்ஹாஜ் T.M. அமீர் சுல்தான் , அல்ஹாஜ் M. அப்துல் ரவூப் , ஜனாப் A.R.காமில் ஃபரீத் மற்றும் ஊர் பிரமுகர்களும் பங்கேற்றனர் .

மாணவ-மாணவிகளுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களும் கலந்து கொண்டனர் .

தகவல்;

மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT Wing),
இராமநாதபுரம் மாவட்டம்.
28.01.17