ஜன.28., காஞ்சி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பல்லாவரம், கண்டோன்மெண்ட், பம்மல், குரோம்பேட்டை உள்ளிட்ட பத்து இடங்களில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சி இன்று 28-01-2017 நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீது.MCom., அவர்கள் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார்.
100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் மஜக கொடிகளுடன் இளைஞர்கள் அணிவகுக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியால் அப்பகுதிகளில் விழாக்கோலம் பூண்டது.
மாநில மனித உரிமை அணி செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாவட்ட செயலாளர் சிந்தா மதார், மாவட்ட பொருளாளர் பல்லாவரம் யாகூப் உள்ளிட்ட மாவட்ட, கிளை, பகுதி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
காஞ்சி வடக்கு மாவட்டம்.
28.01.2017