
தென்காசி: அக்.27.,
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோயில் நகராட்சிக்குட்பட்ட காவிரி நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது அதை சரிசெய்து தருமாறு மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதை தொடர்ந்து மாவட்டச் செயலாளர் M.பீர் மைதீன், அவர்கள் தலைமையில்
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் V.M.ராஜலட்சுமி, அவர்களை சந்தித்து குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக மஜக வினர் மனு அளித்தனர் மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முகமது இப்ராஹிம், மாவட்ட துணைச் செயலாளர்கள் பொன்னானி அபுதாஹீர் , வாவை இனாயதுல்லா, மனித உரிமை அணி மாவட்டச் செயலாளர் சங்கை A.பீர்மைதீன், மற்றும் சங்கரன் கோவில் நகரச் செயலாளர் சுல்தான், நகர பொருளாளர் இத்ரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
26.10.2020