வேலூர்.ஏப்.12., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட அலுவலகத்திற்க்கு மாணவர் இந்தியா-வின் மாநில து.செயலாளர் அப்சர் சையத் வருகை புரிந்தார். மஜக வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்பு குழு தலைவர் S.முஹம்மத் ஜாபர் முன்னிலையில், அமைப்பு குழு பொறுப்பாளர் முஹம்மத் வசீம் அவர்கள் சாலவை அணிவித்து வரவேற்றார். பின்பு மஜக நிர்வாகிகளிடம் மாணவர் இந்தியா-வின் சம்பந்தமாகவும் மாணவர்களுடைய எழுச்சி தொடர்பாக தீவிரமான ஆலோசனைகளை வழங்கினார். உடன் களப்போராளிகள் இருந்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING வேலூர் கிழக்கு மாவட்டம். 12.04.2017
செய்திகள்
வாணியம்பாடியில் அமைச்சர் ஆய்வு உடன் மஜக மாவட்ட செயலாளர் வசீம் அக்ரம் Ex.Mc
வேலூர்.ஏப்.12., இன்று வேலூர் மேற்கு மாவட்டம் வாணியம்பாடி நகரத்திற்கு உட்பட்ட 31வது வார்டில் இன்று மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நீலோபர் கபீல் அவர்கள் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணியினை பார்வையிட்டர்கள். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் J.M.வசீம் அக்ரம்.Ex.MC, அதிமுக நகர செயலாளர் G.சதாசிவம், நகராட்சி பொறியாளர் திரு.கோபு, K.பிரகாசம் Ex.MC, திரு.K.கோவிந்தராஜ், P.M.ஷபியுல்லாஹ் Ex.MC, S.M.ஷானவாஸ் மற்றும் மஜக நிர்வாகிகள் உடன்யிருந்தனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING வேலூர் மேற்கு மாவட்டம். 12.04.2017
உலக அமைதிக்கு அச்சுறுத்தல்…!
(M. தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள கருத்துப்பதிவு...) கடந்த மூன்று நாட்கள் முன்பு எகிப்தில் கிறித்தவ தேவாலயத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 44 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் நடைபெற்ற அரசு தாக்குதலில் 88 பேர் கொல்லப்பட்டனர். ஸ்வீடனில் நடைபெற்ற தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இம்மூன்று சம்பவங்களும் கடும் கண்டனத்திற்குரியது. அப்பாவி மக்களின் மீது நடத்தப்படும் இப்பயங்கரவாத சம்பவங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இஸ்ரேலிய மொஸாத், IS பயங்கரவாத இயக்கம் ஆகியவை உலக அமைதியை சீர்குலைத்து வருகின்றன. இவற்றோடு சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு மோதல்களில் கிளர்ச்சி குழுக்களும், அரசும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதின் விளைவாக 3 லட்சம் அப்பாவி சிரியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர், லட்சக்கணக்கான சிரியர்கள் அகதிகளாக திரிகின்றனர். சிரியாவின் அமைதியை சீர்குலைத்தத்தில் IS பயங்கரவாத அமைப்புக்கு எந்த அளவிற்கு தொடர்பு உள்ளதோ, அதே அளவிற்கு அமெரிக்க, ரஷ்யா, துருக்கி, ஈரான் ஆகிய 4 நாடுகளின் நியாயமாற்ற தலையீடுகளும் காரணங்களாக உள்ளன. இந்நிலையில் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதட்டம் புதிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருக்கிறது. அமெரிக்காவும், வாடகொரியாவும் நடத்தும் போர் பயிற்சிகள் பீதியூட்டும் வகையில் இருக்கிறது. ஐ.நா. சபையின் செயலற்ற, பலவீனமான போக்குகள் உலக அமைதிக்கான முன் முயற்ச்சியில்
காவல்துறையின் வரம்பு மீறல் கண்டிக்கத்தக்கது…
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்திய பெண்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதில் இருபதுக்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். குறிப்பாக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பெண்கள் மீது நடத்திய வன்முறை தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. மக்கள் போராட்டங்களை நிதானமாக கையாலுவதுதான் காவல்துறையின் கடமையாகும். இப்படி அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை எந்த விதத்திலும் ஏற்கமுடியாது. மக்கள் விரும்பாத இடங்களில் புதிய மதுக்கடைகளை வைப்பது இதுபோன்ற கிளர்ச்சிகளுக்கு தான் வழிவகுக்கும். இவ்விசையத்தில் தமிழக அரசு மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவேண்டும். சாமளாபுரத்தில் அப்பாவி பெண்கள் மீது மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்ட ADSP பாண்டியராஜன் உள்ளிட்ட காவலர்கள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் ஆறுதலும் கிடைக்கும், வரம்பு மீறும் அதிகாரிகளுக்கும் இது பாடமாக அமையும். இந்நிலையில் அந்த மதுக்கடையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது வரவேற்கதக்கது. இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொது செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 12.04.2017
மஜக பொது செயலாளருடன் நேதாஜி சுபாஷ் சேனாவினர் சந்திப்பு…
மதுரை.ஏப்.12., இன்று மதுரை வந்த மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களை நேதாஜி சுபாஷ் சேனாவின் மாநில தலைவர் டாக்டர்.V. மகாராஜன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M. நாசர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ் ஆகியோர் உடன் இருந்தார். தேவர் சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் அவற்றை சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துனர். இது குறித்து சட்டமன்றத்தில் பேசுவதாக பொது செயலாளர் வாக்குறுதி அளித்தார்கள். சமூக நல்லிணக்கம், சுற்றுசூழல் பாதுகாப்பு, பின்தங்கிய மக்களின் மேம்பாடு ஆகிய களங்களில் மஜகவும், நேதாஜி சுபாஷ் சேனாவும் இணைந்து செயல்படுவோம் என இரு தரப்பும் உறுதியேற்றுக் கொண்டனர். இறுதியாக மஜக பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சட்டமன்ற உரைகளுக்கும், சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் நேதாஜி சுபாஷ் சேனாவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING 12.04.2017