தேனி.ஆக.05., நேற்று (04/08/2017) தமிழக - கேரளா எல்லை பிரச்சனைக்கு சுமூக தீர்வுகாண வருகை தந்த மாண்புமிகு தமிழக வருவாய் துறை அமைச்சர் R.B.உதயகுமார் அவர்களும், தேனிமாவட்ட செயலாலாளரும் ஆன்டிபட்டி சட்டமன்ற உறுப்பினருமான தங்கத்தமிழ் செல்வன் அவர்களும், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் S.T.K.ஜக்கையன் அவர்களும், தேனி மாவட்ட கம்பம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்திற்க்கு வருகைதந்தனர். அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் M.M.ரியாஸ் அவர்களும் , மாநில செயற்க்குழு உறுப்பினர் கரிம் அவர்களும், துணை செயலாளர்களான காதர், ஜின்னா ஆகியோரும், கம்பம் நகர செயலாளர் அயூப்கான், பொருளாளர் அசிக் கனி , இளைஞரணி காஜா, மருத்துவரணி லியாகத் அலி, புதுப்பட்டி ஊராட்சி செயலாளர் ராஜா மற்றும் நகர உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்ப்பு கொடுத்தனர். அதற்க்கு நன்றி கூறிய மாண்புமிகு அமைச்சர் R.B.உதயகுமார் அவர்கள் "நீங்கள் தமிமுன் அன்சாரி என்ற அருமையான சுய நலமற்ற தலைவரை பெற்றுள்ளீர்கள்" உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி புன்னகையுடன் விடைபெற்றார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தேனி மாவட்டம். 04.08.2017
செய்திகள்
வேலூர் கிழக்கு மாவட்ட மஜக ஆலோசனைக் கூட்டம்…!
வேலூர்.ஆக.05., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம், முஹம்மத் சலீம், முஹம்மத் யாசீன், ஜாகீர் உசேன், சையத் உசேன் மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபீக் ரப்பானீ ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் வேலூர் மாநகரத்தில் உள்ள கிளைகளை மறுசீரமைக்கப்படவேண்டும் என்றும், பல புதிய கிளைகள் அமைக்கப்படவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் வேலூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகரங்களில் (ஆர்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை, விஷாரம் மற்றும் பல) இடங்களில் மஜக வலுப்படுத்தவேண்டும் என்றும் ஏகமனதோடு தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுவது, டெங்கு காய்ச்சல் மீண்டும் தலை தூக்கியுள்ளதால் இதை தடுக்கும் வகையில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் மஜக சார்பாக வழங்குவது. மேலும் வேலூர் மாநகரில் உள்ள பொது மக்களின் அன்றாட பிரச்சனைகளை கண்டறிந்து அரசின் வாயிலாக தீர்த்து வைப்பது. இந்த அனைத்து தீர்மானங்களும் குறிப்பிட்ட நாட்களில் மிக விரைவாக
மஜக மத்திய சென்னை மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்…!
சென்னை.ஆக.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் நேற்று (04-08-2017) நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் A.முஹம்மது ஹாலித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் M.Y.பிஸ்மில்லாகான், துணைச் செயலாளர்கள் பீர் முஹம்மது, ரவுப் ரஹீம், வர்த்தகர் அணிச் செயலாளர் அப்பாஸ் மற்றும் தொழிலாளர் அணி செயலாளர் முஸாகனி ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணி குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பல சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டன. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING மத்திய சென்னை மாவட்டம் 04.08.2017
குடியாத்தம் நகராட்சி ஆணையரிடம் மஜக நிர்வாகிகள் மனு..! வார்டுகளில் ஆணையர் நேரில் ஆய்வு..!!
வேலூர்.ஆக.04., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வேலூர் (மேற்கு மாவட்டம்) குடியாத்தம் நகராட்சியில் மொத்தம் உள்ள 36- வார்டுகளில் குப்பைகள் தூர்வாரப்பட வேண்டும் என்றும், சாலைகள் இல்லாத தெருக்களில் சாலைகள் போடுவதுற்க்கும், கால்வாய் அமைக்கவும், கழிவுநீர் தேங்கி உள்ள பகுதிகளில் சீரமைப்பு செய்யவும் நகராட்சி ஆணையரிடம் சில தினங்கள் முன்பு மனு அளிக்கப்பட்டது. மஜக கோரிக்கை ஏற்று முதல் கட்டமாக MBS-நகர் 8- வது வார்டு பகுதிகளில் குடியாத்தம் நகராட்சி ஆணையர் சங்கர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சதீஷ், சிவக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தார்கள். இப்பகுதியில் உள்ள சுகாதார சீர்கேடு குறித்து சுற்றி உள்ள பகுதிகளில் சாலைகள், கால்வாய்கள், கழிவுநீர் தேங்கி உள்ள இடங்களில் சீர் செய்து 15 நாட்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள். உடன் மஜக நகர செயலாளர் S.அனீஸ், நகரபொருளாளர் முபாரக் அஹமத், நகர துணை செயலாளர் சலீம் மற்றும் கிளை நிர்வாகிகள் அல்தாப், கபீர், முன்னா, அபுல், சேட்டு, அலீம் ஆகியோர் உடனிருந்தார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING வேலூர் (மேற்கு) மாவட்டம். குடியாத்தம் நகரம் 04.08.2017.
ஈரோடு மாவட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் சுற்றுப்பயணம்.!
ஈரோடு.ஆகஸ்ட்.04., ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று (03-08-17 ) மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து மஜக வினரை உற்சாகப்படுத்தினார். அடுத்ததாக பவானி நகருக்கு வருகை தந்தவர் அங்கிருக்கும் மஜக அலுவலகத்திற்கு வருகை தந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து அங்கு நடைபெறும் கட்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்து அங்கிருந்து விடைபெற்றார். பிறகு அந்தியூருக்கு சென்ற பொதுச்செயலாளர் அவர்களை பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் சிறப்பான முறையில் வரவேற்றனர். வக்பு நிலம் ஆக்கிரப்பில் உள்ளதை பொதுச்செயலாளருக்கு புகார் மனுவாக கொடுத்தனர். பிறகு அங்கு ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு இடங்களை பார்வையிட்டு, தந்த புகாரையும் ஆய்வு செய்து இது குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கும் அமைச்சர் பெருமக்களிடமும் கொண்டு செல்வதாகவும் கூறினார். பிறகு சத்தியமங்கலம் வருகை தந்தவர் அங்கிருந்த பள்ளிவாசலுக்கு சென்றவர் ஜமாத் பெரியவர்களிடமும் இளைஞர்களிடமும் சமுதாய நலன் சார்ந்த கலந்துரையாடலை முடித்து விட்டு, மஜக துணைப் பொதுச் செயலாளர் செய்யது அகமது பாரூக் அவர்களின் வீட்டிற்கு சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தையை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது மாநில துணைச்செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா அவர்களும், மாநில விவசாய அணிச்செயலாளர் நாகை முபாரக் அவர்களும், மாநில