வேலூர்.ஆக.04., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வேலூர் (மேற்கு மாவட்டம்) குடியாத்தம் நகராட்சியில் மொத்தம் உள்ள 36- வார்டுகளில் குப்பைகள் தூர்வாரப்பட வேண்டும் என்றும், சாலைகள் இல்லாத தெருக்களில் சாலைகள் போடுவதுற்க்கும், கால்வாய் அமைக்கவும், கழிவுநீர் தேங்கி உள்ள பகுதிகளில் சீரமைப்பு செய்யவும் நகராட்சி ஆணையரிடம் சில தினங்கள் முன்பு மனு அளிக்கப்பட்டது.
மஜக கோரிக்கை ஏற்று முதல் கட்டமாக MBS-நகர் 8- வது வார்டு பகுதிகளில் குடியாத்தம் நகராட்சி ஆணையர் சங்கர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சதீஷ், சிவக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தார்கள்.
இப்பகுதியில் உள்ள சுகாதார சீர்கேடு குறித்து சுற்றி உள்ள பகுதிகளில் சாலைகள், கால்வாய்கள், கழிவுநீர் தேங்கி உள்ள இடங்களில் சீர் செய்து 15 நாட்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள்.
உடன் மஜக நகர செயலாளர் S.அனீஸ், நகரபொருளாளர் முபாரக் அஹமத், நகர துணை செயலாளர் சலீம் மற்றும்
கிளை நிர்வாகிகள் அல்தாப், கபீர், முன்னா, அபுல், சேட்டு, அலீம் ஆகியோர் உடனிருந்தார்கள்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
வேலூர் (மேற்கு) மாவட்டம்.
குடியாத்தம் நகரம்
04.08.2017.