வேலூர்.நவ.08., பேர்ணாம்பேட் நகரில் மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம் K.ரஷீத் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது. காதர்பேட் T.R.முன்னா (எ) நஸிர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நவாஸ் கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 2-வது வார்டு மற்றும் 18-வார்டு புதிய கிளை உதயமானது. 2-வார்டு கிளை நிர்வாகிகள்:- செயலாளர் - சுபேர் பொருளாளர் - இம்தியாஸ் து.செயலாளர்கள் - அஜீம், அஸ்லாம், அமீன் இளைஞர் அணி செயலாளர் - அன்சர் பாஷா பொருளாளர் - அக்தர் துணை செயலாளர் - ஷீரிப் 18-வார்டு கிளை நிர்வாகிகள் :- செயலாளர் - அக்பர் பொருளாளர் - உசேன் து.செயலாளர்கள் - ஜாகீர், அஸ்கர் அகியோர் கிளை நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டார்கள். தகவல்; #மஜக_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #பேர்ணாம்பேட்_நகரம் #வேலூர்_மே_மாவட்டம் 08-11-2017
செய்திகள்
தமிழக அரசியல் களத்தில் முதல்முறையாக…… நாகையில் மஜக சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி முகாம்!
நாகை.நவ.08., புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது மக்களுக்கு மத்தியில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை முன்னெடுப்பது தொடர்பான ஒருநாள் பயிற்சி முகாம் நாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இதில் நாகை (தெற்கு) நாகை (வடக்கு)திருவாரூர், தஞ்சை (வடக்கு) கடலூர்(வடக்கு) விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பேரிடர் மீட்புக் குழுவில் தேர்வு செய்யப்பட்ட முக்கிய செயல்வீரர்கள் 125 பேர் பங்கு கொண்டனர். Save the children_Nokia மற்றும் அவ்வை கிராம அமைப்பு ஆகிய தொண்டு நிறுவனங்கள் இப்பயிற்சியை வழங்கினர். வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்பது, காயமடைந்தவர்களை மீட்பது, இறந்தவர்களை கண்டெடுப்பது, ஆபத்தான மீட்பு பணிகளை கவனமாக கையாள்வது என செயல்முறை பயிற்சிகள் நடத்தப்பட்டன. இம்முகாமை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பார்வையிட்டு பயிற்சி நிறைவு சான்றிதழ்களில் கையெழுத்திட்டார். தமிழக அளவில் அரசியல் மற்றும் மக்கள் இயக்கங்களில் மஜக தான் இத்தகைய பயிற்சி முகாமை முதல் முறையாக டெல்டா மாவட்டங்களை தேர்ந்தெடுத்து நடத்தியிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வை மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் தலைமையில் மாநிலத் துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ், மாநில விவசாயிகள் அணிச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் மாவட்ட வாரியாக
மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் நாகை MLA.!
(தொகுப்பு 1) நாகை தொகுதிக்குட்பட்ட நாகை ஒன்றியத்தில் சிக்கல் ஊராட்சியில் மழைவெள்ள பாதிப்புகளை எம்.தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆய்வு செய்தார். சிக்கல் ஊராட்சியில் உள்ள தட்டான்குளம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர்வார மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பிறகு அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியை ஆய்வுசெய்து ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பிறகு சிக்கல் சிங்காரவேலர் கோவில் அருகே இருந்த மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். அங்கே ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பங்கள், மின் இணைப்பு பெட்டிகளை சரிசெய்ய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனை தொடந்து குற்றம் பொறுத்தானிருப்பு கிராமத்தில் தலித் மக்கள் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு அப்பகுதியில் இடிந்து விழுந்துள்ள அரசு கட்டி கொடுத்த 35 வீடுகளை பழுதடைந்த நிலையில் இருப்பதால் அவற்றை சீல் வைத்து மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிறகு அக்கிராமத்தில் உள்ள பகுதி நேர அங்காடியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். சமையல் எண்ணெய் விநியோகத்தை அனைவருக்கும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். பிறகு வடகுடி ஊராட்சிக்கு சென்று மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
நவம்பர் 8 கருப்பு நாள்..! எதிர்கட்சிகள் போராட்டத்திற்கு மஜக ஆதரவு…!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, வெளியிடும் அறிக்கை) கடந்த ஆண்டு நவம்பர் 8 அன்று மத்திய பாஜக அரசு 500, 1000, ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்தது. இதன் மூலம் பொருளாதாரப்புரட்சி ஏற்படும் என்றும், கருப்பு பணம் ஒழியும் என்றும் ,புதிய இந்தியா பிறக்கிறது என்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்கமளித்தார். ஆனால், கடந்த ஓராண்டில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டு , நாட்டின் பொருளாதாரம் சீரழிந்திருக்கிறது.நாடெங்கும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார அனுகுமுறைகளை தோலுரிக்கும் வகையில் நாடுதழுவிய அளவில் எதிர்கட்சிகள் நவம்பர் 8 அன்று கருப்பு தினம் கடைபிடிக்க இருப்பது வரவேற்க்கதக்கது. எதிர் கட்சிகளின் இப்போராட்டத்திற்கு மஜக வின் சார்பில் எமது தார்மீக ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். இவன்; #M_தமிமுன்_அன்சாரி_MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி.
மஜக புதுக்கோட்டை மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்…!
புதுகை.நவ.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் துரை முஹம்மது தலைமையில் நேற்று கரம்பக்குடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்வரும் டிசம்பர் 6-ஆம் தேதி அன்று புதுக்கோட்டை ரயில் நிலையத்தை நூற்றுக்கணக்கானோருடன் சென்று முற்றுகையிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிஃப், மாவட்ட துணைச்செயலாளர்கள் முஹம்மது ஜான், ரெங்கசாமி, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சீனிவாசன், நியாஸ். கறம்பக்குடி நகரசெயலாளர் அமீர்அம்ஷா , இளைஞரணி செயலாளர் ஆசை அப்துல்லா , தொழில்சங்க செயலாளர் ராஜ்கபூர் , விவசாய அணி செயலாளர் அப்துல்கரீம் , துணைச்செயலாளர் லெட்சுமணன், ரகுமத்துல்லா, இப்ராஹிம், அவைத்தலைவர் குத்புதீன் ஆகியோர் கலந்துகொண்டனர் . #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்