சென்னை.டிச.18., சிறை சகோதரர்கள் பாஷாபாய், அபுதாஹீர், ஜபருல்லாஹ், ஆகியோரின் விடுதலை சம்பந்தமாக சிறைத்துறை டிஜிபி அவர்களை மஜக மாநில செயலாளர் தைமியா, மாநில துணைசெயலாளர்கள் அப்துல்பஷீர், ஷமீம் அகமது, மற்றும் சகோதரர் காதர் ஆகியோர் சந்தித்து சிறைவாசிகள் விடுதலை குறித்து பேசினார்கள். முன்னதாக சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக இன்று காலை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், அவர்களை மஜக நிர்வாகிகள் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_சென்னை 18.12.17
செய்திகள்
எலந்தங்குடியில் திருமணத்தை முன்னிட்டு இரத்த தான முகாம்.! முற்போக்கு முயற்சி என மஜக பொதுசெயலாளர் நேரில் வாழ்த்து..!!
நாகை.டிச.18., நாகை வடக்கு மாவட்டம், எலந்தங்குடியில் சமூக ஆர்வலர் S.ஹாஜா மைதீன் அவர்களின் திருமண நிகழ்வு நேற்று (17.12.2017) நடைப்பெற்றது. திருமணத்தை முன்னிட்டு இரத்த தான முகாமும் நடைப்பெற்றது.இந்த முகாமில் பல்வேறு மதத்தினர்களும் வருகை தந்து இரத்த தானம் செய்தனர். மணமக்களை வாழ்த்த மஜக பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து வாழ்த்தி விட்டு திருமணத்தை முன்னிட்டு இரத்த தான முகாமை ஏற்பாடு செய்தற்காக பாராட்டுக்களையும் கூறினார்.இது முற்போக்கு முயற்சி என கூறி வாழ்த்தினார். தினேஷ் என்ற இரத்த தான கொடையாளிக்கு சான்றிதழை வழங்கி சிறப்பித்தார். அவ்வூரை சார்ந்த ஜாமத்தினர்களும், பிரமுகர்களும் பொதுசெயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். அவ்வூரை சார்ந்த ஏராளமானோர்கள் மஜக பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். எலந்தங்குடியை தொடர்ந்து புறப்பட்டு நீடுர் எஸ்கோயர் சாதிக் இல்ல திருமண விழாவில் பங்கேற்க திருவிட்டச்சேரி புறப்பட்டு சென்றார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் N.M.மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் A.J.சாகுல் ஹமீது, அபுசாலிஹ், ஜமில் , சமூக ஆர்வலர் இர்பான் மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உடனியிருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_வடக்கு_மாவட்டம்
சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சட்டத்துறை அமைச்சரை சந்தித்த மஜக நிர்வாகிகள்!!
சென்னை.டிச.18., சிறை சகோதரர்கள் பாஷாபாய், அபுதாஹீர், ஜபருல்லாஹ், ஆகியோரின் விடுதலை சம்பந்தமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களை மஜக மாநில துணைசெயலாளர்கள் அப்துல்பஷீர், ஷமீம்அகமது ஆகியோர் சந்தித்து சிறைவாசிகள் விடுதலை குறித்து பேசினார்கள். அதை தொடர்ந்து இன்று மாலை சிறைத்துறை உயர் அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_சென்னை 18.12.17
புதிய வீரியத்துடன்..! திருப்பூண்டி மஜக..!!
நாகை. டிச.18., திருப்பூண்டியில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கிளை சார்பாக இன்று புதிய கிளை அலுவலகம் திறப்பு, கொடி ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி அவர்கள் திருப்பூண்டி கிளைக்கு வருகை தந்து மூன்று இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மஜக கொடிகம்பங்களில் கொடி ஏற்றினார். அதை தொடர்ந்து திருப்பூண்டி கிளையின் சார்பாக பிரம்மாண்ட கிளை அலுவலகத்தையும் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திரளானோர் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கதுல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஷேக் மன்சூர், யூசுப்தீன், ஹமீது ஜெஹபர், மாவட்ட அணி செயலாளர்கள் அப்துல் அஜிஸ், சாகுல் ஹமீது, பிஸ்மி யூசுப், தெத்தி ஆரிப், அல்லா பிச்சை, ரெக்ஸ் சுல்தான், அப்துல் ரஹ்மான் மற்றும் நகர, ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருப்பூண்டி கிளை செயலாளர் அஸ்ரப் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
கிளியனூர் சலாவுதீன் இல்ல புதுமனை புகுவிழா! ஐயப்ப சாமிகளுக்கு சிறப்பு தனி விருந்து நடத்தி மரியாதை!
நாகை. டிச.18., நாகை வடக்கு மாவட்டம், கிளியனூரில் சிங்கப்பூர் தொழில் அதிபர் சலாவுதீன் அவர்கள் கட்டிய புதிய வீடு திறப்பு விழா நிகழ்ச்சியில் மஜக பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவர் அப்துல் ரஹ்மான் Ex.MP அவர்களும், வக்பு வாரிய உறுப்பினர் டாக்டர் காஜா K.மஜிது அவர்களும் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் சுற்றுவட்டாரங்களை சார்ந்த ஜமாத்தார்களும்,பல்வேறு சமூக மக்களும் கலந்துக்கொண்டர். அழைப்பின் பெயரில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். அவர்களை சிறப்பான விதத்தில் தனி சைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு பரிமாறபட்டது. இது கவேரி டெல்டா மாவட்டங்களின் கூட்டு காலசாரத்தை பிரதி பலிக்கும் வகையில் இருந்தது. அங்கு தீன் இசைத்தென்றல் தேரழந்தூர் தாஜிதீன் அவர்கள் பாடல்களை பாடி கொண்டிருந்த போது அவரிடம் பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் "மக்கத்து மலரே... மாணிக்க சுடரே... யா ரசூல்லாஹ்..." என்ற நாகூர் ஹனிபா அவர்களின் பாடலை பாட முடியுமா என்று கேட்டதும், அந்த பாடலை எழுதியவர் இதே கிளியனூரை சார்ந்த கவிஞர் அப்துல் சலாம் தான் என்று தெரியாதா? என பாடகர் தாஜ்தீன்